ரேன்சம்வேர் தாக்குதலை தடுக்கலாம்... திருநெல்வேலி மாணவி நம்பிக்கை!

ரேன்சம்வேர் மால்வேர் தாக்குதலை தன்னால் தடுக்க முடியும் என திருநெல்வேலியை சேர்ந்த மாணவி விஷாலினி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வைரஸ்

நமது கணினிகளில் உள்ள முக்கியத் தகவல்களை எடுத்து வைத்துக்கொண்டு, மிரட்டிப் பணம் பறிக்கும் தாக்குதல்தான் ரேன்சம்வேர் மால்வேர் தாக்குதல். கடந்த வெள்ளிக்கிழமை முதல் ரேன்சம்வேர் மால்வேர் உலகம் முழுவதும் உள்ள கணினிகளைத் தாக்கி வருகிறது. 100க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த மால்வேர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே திருநெல்வேலியை சேர்ந்த மாணவி விஷாலினி(16),' ரேன்சம்வேர் மால்வேர் தாக்குதலை தடுக்க என்னால் முடியும்' எனக் கூறியுள்ளார்.

சிறுவயதிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தேர்வில் வெற்றிப்பெற்ற விஷாலினி, தனது ஐ.க்யூ திறனுக்காக பாராட்டப்பட்டவர்.இவர் தற்போது நேரடியாக பல்கலைக்கழகம் ஒன்றில் பி.டெக் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். மேலும் இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையத்திலும் சிறப்புரை ஆற்றியுள்ளார்.

இதனிடையே ரேன்சம்வேர் வைரஸ் குறித்து அவர் கூறுகையில், 'இந்த மால்வேர் கணினிகள் மட்டுமல்லாமல் எம்.ஆர்.ஐ, ஸ்கேனர்கள் உள்ளிட்ட மருத்துவ சாதனங்களையும் தாக்கவல்லது. இது குறித்து மற்ற நாடுகளில் இருக்கும் விழிப்பு உணர்வு இந்தியாவில் இல்லை. மேலும் இந்த மால்வேர் குறித்து ஆய்வுகள் செய்து வருகிறேன். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக்கொண்டால், சரி செய்து தருவேன் மேலும் மத்திய அரசிடமும் இது குறித்து பேசியுள்ளதாகவும்' அவர் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!