நீட் தேர்வு விவகாரம் - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..!

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்குத் தடை விதிக்க முடியாது, என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்புக்கு, மத்தியில் மே 7-ம் தேதி  நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு நடைபெற்ற மையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளும் தேர்வு வினாத்தாள்களும் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பின. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. மேலும் நாடு முழுவதும் ஒரே வினாத்தாள்கள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே நடைபெற்ற இந்தத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் பொதுவான வினாத்தாளில் புதிதாகத் தேர்வு நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் மருத்துவப்படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்குத் தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்களைப் பயன்படுத்தி தேர்வு நடத்துவது குறித்து மத்திய பள்ளிக் கல்வி வாரியம் மற்றும் இந்திய மருத்துவ வாரியம் ஆகிய இரு அமைப்புகளும் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!