Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வற்றாத கிணறு... வீணடிக்கும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை!

 

                                                சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கிணறு    

'தண்ணீர்ப் பஞ்சம் இல்லையென்றால்தான் அது அதிசயம்' என்ற நிலையில் தமிழ்நாட்டுக்கான வறட்சி இருக்கிறது. சென்னையில் வீடுகளை வாடகைக்கு விடுகிறவர்கள், 'வாரத்தில் இரண்டுநாளைக்கு மட்டும்தான் குடிதண்ணீர் வரும். அரைமணி நேரத்துக்குள் பிடித்துக்கொள்ளவேண்டும்... இருப்பது நான்கு குடித்தனங்கள், ஆளுக்கு மூன்று குடம்தான் லிமிட். ஹவுஸ் ஓனர் என்பதால், எங்களுக்கு ஐந்து குடங்கள்... போர் வாட்டர் வராது. லாரியில் வரும் மெட்ரோ வாட்டர் கிடைத்தால், பிடித்துக் கொள்ளுங்கள்' என்று முதலிலேயே சொல்லி விடுகிறார்கள். தண்ணீர் சோகத்துக்குக் கூடுதல் காரணம், சுட்டெரிக்கும் வெயில்...மெட்ரோ வாட்டர் சர்வீஸ் மூலம் லாரியில் கொண்டு வரப்படும் தண்ணீரை இரண்டு தெருக்களுக்குப் பொதுவாக இருக்கும் சின்டக்ஸ் டாங்கில்  நிரப்பிவிட்டுப் போவது இரண்டு நாளைக்கு ஒருமுறை நடக்கிறது. குடும்பத்துக்கு மூன்று குடம் என்ற கணக்கில் உள்ளூர் ஆசாமி ஒருவர் தண்ணீர் விடுவார். தண்ணீரை யார் விடுவது என்பதிலும் ஒரு போட்டி இருந்து அதன்பின் உள்ளூரில் பலம் பொருந்தியவர் கைக்கு அந்த வாய்ப்பு வருவதெல்லாம் தனிக்கதை.தண்ணீருக்கான தேவை இத்தனை தூரம் இருக்கிறது...  அதற்கு முக்கியக் காரணம், போர் வாட்டர் எனப்படும் நிலத்தடி நீர் சென்னையில் வெகுவாக குறைந்துவிட்டது.  புறநகரிலுள்ள போரூர் ஏரி முதல் ரெட்டை ஏரியைச் சுற்றியிருந்த துணை ஏரிகளும், ஆறுகளும் இப்போது இல்லை.

 கிணற்று நீரை சேமிக்க கட்டிய நீரேற்று மையம்    

கிணறுகள் பற்றிப் பேசவே வேண்டாம்... ஐந்நூறு அடிக்கு மேல் தோண்டினாலும் பூமியில் நீரில்லை. அடுத்த முயற்சியாக ஆயிரம் அடிக்கு இடம் மாற்றிப் பள்ளம் போட்டு நீரைத் தேடுகிறார்கள்...'இருக்கிற கிணறுகளையாவது பராமரித்து நல்லமுறையில் பயன்படுத்தலாமே' என்ற பொறுப்புணர்வு மக்களுக்கு இல்லை என்றாலும் அரசுக்கு இருக்க வேண்டியது அவசியம். அரசுக்குப் பொறுப்பு இருக்கிறதா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது! இந்தப் படங்களைப் பாருங்கள்... பிரமாண்ட பரப்பளவுடன் கிடக்கிற இந்தக் கிணற்றையும் பாருங்கள்... கடைசியாக கடந்த 20.7.2009 அன்று இந்தக் கிணறு சுத்தம் செய்யப்பட்டது என்று கிணற்றின் சுற்றுச் சுவற்றில் குறித்து வைத்துள்ளார்கள்...யாருமே நுழையமுடியாத காட்டுப்பகுதிக்குள் இந்தக் கிணறு இருப்பது போல் புதர் மண்டிக் கிடக்கிறது. ஆனால், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குள்ளேதான் இந்தக் கிணறு இருக்கிறது. சில ஆண்டுகள் முன்னர் வரையில் இந்தக் கிணற்றிலிருந்து தண்ணீரை நீரேற்று நிலையம் மூலமாக அதன் அருகிலேயே உள்ள பெரிய டாங்கில் ஏற்றி நிரப்பி வந்திருக்கிறார்கள். அதிகாரிகள் அமைத்த அந்த டாங்கியில்,  இருபதாயிரம் குடம் நீர் பிடிக்கும்... ஆம், மக்களே அப்படிப் பிடித்து சேமித்து வைத்து, அதைத்தான் அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் தேவைக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இப்போது இந்தக் கிணற்றை சீந்துவார் யாருமில்லை.

"ஸ்டான்லி மருத்துவமனை, இப்போது நீருக்கு என்ன செய்கிறது?" என்ற கேள்வியுடன் மருத்துவமனை நிர்வாகத்தை அணுகினோம். விளக்கம் சொல்லி சமாளிக்கவும் அங்கே உரிய அதிகாரிகள் இருக்கையில் இல்லை என்பதைக் கடைநிலை ஊழியர்கள் மூலம் அறிந்தோம். 'தினமும் நான்கு லாரிகளில் ஸ்டான்லி மருத்துவமனைக்குக் குடிநீர் வருகிறது. அதையேதான் கைகழுவது முதல் கால் கழுவுவது வரையிலும் பயன்படுத்துகிறார்கள்' என்ற வேதனையான தகவலும் அதே ஊழியர்கள் மூலமே நமக்குக் கிடைத்தது. நான்கு லாரி குடிநீருக்கு என்ன விலை, அதற்கு கொடுக்கப்படுவது அரசுப் பணமா என்பது குறித்த ஆய்வு அடுத்தக்கட்டம்...அரசு ஸ்டான்லி மருத்துவமனை அதிகாரிகளே, சுகாதாரத் துறையினரே உங்களிடம் ஒரேயொரு கேள்வி மட்டும் கேட்கிறோம்... அந்தக் கிணற்றை ஏன் பாழடைந்த கிணறாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close