'இரு அணிகள் இணைந்தால்தான் இது நடக்கும்' : சொல்கிறார் நடராஜன்!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டது. பன்னீர்செல்வம், சசிகலா, தீபா என்று தனித்தனியாக செயல்பட்டனர். சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் கைது செய்யப்பட்டப் பிறகு அ.தி.மு.க-வை இணைப்பதற்கான, முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தற்போதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

Natarajan


உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவர் நடராஜன், இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில், முள்ளிவாய்க்கால் போரின் 8-ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி, தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடந்த, இரங்கல் நிகழ்வில் நடராஜன் கலந்து கொண்டார். 


பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்ததற்கு, அன்றும் இன்றும் பி.ஹெச். பாண்டியன்தான் காரணம். இலங்கைத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் செய்த தவறை பி.ஜே.பி அரசும் செய்யக்கூடாது.


அ.தி.மு.க-வின் இரு அணிகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே, மற்ற கட்சிகளை வீழ்த்த முடியும். குறிப்பாக, அப்போதுதான் இரட்டை இலைச் சின்னத்தையும் மீட்க முடியும். இதற்காக, இரு அணிகளும் இணைய வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!