வெளியிடப்பட்ட நேரம்: 04:50 (19/05/2017)

கடைசி தொடர்பு:06:51 (19/05/2017)

நத்தம் விஸ்வநாதனுக்கு எதிரான மனு தள்ளுபடி! - நீதிபதி அதிரடி

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிரான மோசடிப் புகாரில் சி.பி.சி.ஐ.டி விசாரணை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. 

நத்தம் விஸ்வநாதன்

திண்டுக்கல்லைச் சேர்ந்த சபாபதி என்பவர் அளித்த புகாரில், '2014 லோக்சபா தேர்தலின்போது, திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க பொறுப்பாளராக நத்தம் விஸ்வநாதன் செயல்பட்டார். தேர்தல் செலவுகளை என் மூலம் மேற்கொண்டார். தேர்தல் முடிந்ததும் எனக்குப் பணம் தருவதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரை தராமல் 2 கோடி  97 லட்சத்து 90 ஆயிரத்து 700 ரூபாயை மோசடி செய்த விஸ்வநாதனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். திண்டுக்கல் போலீசார் விசாரித்தனர். நத்தம் விஸ்வநாதனுக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மார்ச்  15-ல் முன்ஜாமீன் அனுமதித்தது.

சபாபதி தாக்கல் செய்த மனுவில், 'நத்தம் விஸ்வநாதன் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால், விசாரணை பாதிக்கும். எனக்கு மிரட்டல் வருகிறது. விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், 'திண்டுக்கல் வடக்கு போலீசார் ஆறு மாதங்களில் விசாரணையை முடித்து, கீழமை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்' என உத்தரவிட்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க