Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு - மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ்!

மே 7-ல் நடந்த நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்து, அகில இந்திய அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில் புதிதாகத் தேர்வு நடத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

NEET - மதுரை ஐகோர்ட்

மதுரை டி.ஆர்.ஓ காலனியைச் சேர்ந்த ஜொனிலாவின் தந்தை சீனிவாசகம் உட்பட 9 பேர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,  'நீட் தேர்வு 2017-ம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, அசாமி, குஜராத்தி, கன்னடம், ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்த அறிவிப்பு வெளியானது. இந்தியா முழுவதும் 2017 மே 7- ல் நீட் தேர்வு நடந்தது. நாங்கள் ஆங்கிலத்தில் எழுதினோம். இந்த அகில இந்தியப் போட்டித் தேர்வை ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், வெவ்வேறு மாறுபட்ட வினாக்கள் கொண்ட வினாத்தாள்கள் பல்வேறு இடங்களில் விநியோகிக்கப்பட்டது. இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 8-ம் தேதி வெளியாகின்றன. இதன் தரவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதனால் எங்களைப் போன்ற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். தேர்வு முடிவை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்.மே 7-ல் நடந்த தேர்வை ரத்து செய்யவேண்டும். அகில இந்திய அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில், புதிதாக நீட் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்' என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறைச் செயலர், இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close