வெளியிடப்பட்ட நேரம்: 10:02 (19/05/2017)

கடைசி தொடர்பு:10:05 (19/05/2017)

இரண்டாவது தூண்டில் வளைவுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடியில் மீனவர்கள் வேலைநிறுத்தம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள வீரபாண்டியன்பட்டினம் மீனவ கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இக்கடல் பகுதியில் அரசுப் பொதுப்பணித்துறை சார்பில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி 10 கோடியே 64 லட்ச ரூபாய் செலவில் கடந்த சில நாளாக நடந்து வருகிறது. 

இதில் 4 (பாயின்ட்) தடுப்புச்சுவர் கட்டுமான பணி நடக்கிறது. இதில் 1-வது தடுப்பு 360 மீட்டர் தூரத்திலும், 2-வது தடுப்பு 170 மீட்டர்  தூரத்திலும், 3-வது தடுப்பு 70 மீட்டர் தூரத்திலும் மற்றும் 4-வது தடுப்பு 50 மீட்டர் தூரத்திலும் அமைக்கப்படும் என அறிவித்து தற்போது 1-வது தடுப்பில் வேலை நடந்து வருகிறது. 2-வது தடுப்புச்சுவரால் பாதுகாப்பு இல்லை எனவும், அதிக அலை காரணமாக விரைவில் கடல் அரிப்பு ஏற்பட்டு மீன்பிடித் தொழில் பாதிப்பதோடு ஊருக்குள் கடல் நீர் வரவும் அதிக வாய்ப்புள்ளதால், 2-வது தடுப்பு தூரமான 170 மீட்டரை 3-வது தடுப்பு தூரமான 70 மீட்டருடன்  இணைத்து 240 மீட்டர் தூரத்தில் 3-வது தடுப்பைக் கட்ட வேண்டும் எனக் கூறி 2-வது தூண்டில் வளைவு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர் மீனவர்கள். மேலும், விரும்பும் வகையில் தடுப்பு அமைக்க வேண்டுமெனக் கூறி, தொடர்ந்து 5-ம் நாளாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க