வெளியிடப்பட்ட நேரம்: 10:29 (19/05/2017)

கடைசி தொடர்பு:11:33 (19/05/2017)

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன: தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்!

தமிழகம், புதுச்சேரியில் 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேரின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. முதல் மூன்று இடங்கள் பெறும் மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படமாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம், மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு தேர்வு முடிவுகளுக்கு முதல் முறையாக மாணவ, மாணவிகளுடைய கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண்களைக் குறுஞ்செய்தியாகப் பெற்றுக்கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால், பள்ளியில் பதிவு செய்யப்பட்டுள்ள கைப்பேசியில் குறுஞ்செய்தியாக முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் மே 19-ம் தேதி காலையிலிருந்து, மே 22-ம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முடிவுகளை, www. tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.