ஊட்டியில் மலர்க் கண்காட்சி தொடங்கியது...

உதகையில் மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது. இதனைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஊட்டி மலர் கண்காட்சி

ஊட்டியில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி உதகை அரசுத் தாவரவியல் பூங்காவில் 121-வது மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது. மூன்று நாள்கள் நடக்கும் இந்த மலர்க் கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கான மலர்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்பு மலர்க் கண்காட்சியினை இன்று காலை 9 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கிவைத்தார்.

மலர் கண்காட்சி

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இம்முறை மலர்க் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட உயர்ந்த கோபுரம், மாமல்லபுரம் பல்லவர் கால கடற்கரைச் சிற்பம், அலங்கார வளைவுகள் எனப் பல வண்ண மலர்களின் அணிவகுப்பால் நிறைந்து காணப்படுகிறது பூங்கா. மேலும், பல தாவர வகைகளின் அலங்கார அணிவகுப்பு, கொய் மலர்களின் மைதானக் கண்காட்சி என மொத்தப் பூங்காவும் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

ஊட்டி மலர் கண்காட்சி

ஊட்டி மலர்க் கண்காட்சியினை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!