Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமலாக்கத்துறைக்குக் கார்த்தி சிதம்பரம் கடிதம்..!

'வாசன் ஹெல்த்கேர் நிறுவனம் தொடர்புடைய அந்நிய முதலீடு மோசடி வழக்கில் ஆவணங்களைச் சரிபார்க்க, கூடுதலாக கால அவகாசம் தேவை' என்று கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறைக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குத் தொடர்புடைய அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்ஜிக் கன்சல்டிங் நிறுவனத்துக்கு, ஏப்ரல் 17ஆம் தேதி, அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. வாசன் ஹெல்த்கேர் நிறுனத்துக்கு அந்நிய முதலீடு செய்யப்பட்டதில் 2,262 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக, அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரத்துக்குத் தெரிவித்திருந்தது.

விளக்கம் அளிப்பதற்கு ஒரு மாத காலம் அவகாசமும் அளித்திருந்தது. தற்போது, ஒரு மாத காலம் முடிவடைந்த நிலையில், மேலும் கூடுதல் அவகாசம் கேட்டு, கார்த்தி சிதம்பரம் சார்பில் அமலாக்கத்துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், புலனாய்வு ஆவணங்களைச் சரிபார்க்க, கூடுதலாக நேரம் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, கார்த்தி சிதம்பரம் லண்டனில் இருக்கலாம் என்று தெரிகிறது. கார்த்தி சிதம்பரம் சார்பில், அவரது வழக்கறிஞர் கடிதம் அனுப்பியுள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close