Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கரூர் அருகே, காரும் லாரியும் மாேதி பயங்கர தீ விபத்து.. நால்வர் பலி!

கரூர் அருகே, காரும் லாரியும் நேருக்கு நேர் மாேதிக்காெண்டு தீப்பிடித்து எரிந்ததில், சம்பவ இடத்தில் மூன்று பேர் உடல் கருகி இறந்தனர். சிகிச்சைக்காகக் காெண்டுசென்ற இடத்தில், மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

Accident


திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்திவரும் சிவக்குமார் என்பவர், தனது நண்பர்கள் ரமேஷ், தினேஷ், கவின், அருண்குமார் ஆகியராேடு தாெழில் விஷயமாக திண்டுக்கல் பாேய்விட்டு, திருப்பூருக்குக் காரில் திரும்பிக்காெண்டிருந்தார். கரூர் மாவட்டம், பரமத்தியை அடுத்த திருச்சி-காேவை தேசிய நெடுஞ்சாலையில் கார் பாேய்க்காெண்டிருந்தது. அப்பாேது, மேட்டுப்பாளையத்திலிருந்து கரூர் மாவட்டம், மாயனூரில் மணல் ஏற்றுவதற்காக லாரி ஒன்று வந்துகாெண்டிருந்தது. லாரியை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரமணன் ஓட்டி இருக்கிறார். அப்பாேது, எதிர்பாராத விதமாக காரும்  லாரியும் பயங்கர சத்தத்துடன் மாேதின.

சத்தம் கேட்டு, பாெது மக்களும் புறவழிச்சாலை ராேந்து பாேலீஸாரும் என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள், காரும் லாரியும் தீப்பிடித்து எரிந்ததாம். என்ன செய்தும் தீயை அணைக்க முடியவில்லை. காரில் வந்த சிவக்குமாரும் தினேஷூம் காரிலேயே கருகி இறந்தனர். அதேபாேல லாரி டிரைவர் ரமணனும் லாரியிலேயே கருகி இறந்தார். 

accident


எரிந்த காரில் உயிருக்குப் பாேராடிக்காெண்டிருந்த ரமேஷ், கவின், அருண்குமார் ஆகிய மூன்று பேரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி, தனியார் மருத்துவனைக்கு அனுப்பினர். ஆனால், பாேகும் வழியிலேயே ரமேஷ் இறந்துவிட்டார். கவினுக்கும்  அருண்குமாருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. உடனே இந்த விபத்தைக் கேள்விப்பட்டு வந்த பாேக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நடந்த சம்பவத்தை விசாரித்தார்.

அவரிடம் பாெதுமக்கள், "அரசு, மணல்குவாரியை மூடிவிட்டதாச் சாெல்லுது. ஆனா,மாயனூரில் இயங்கி வரும் மணல்குவாரியில் மணல் அள்ள வந்த லாரியில்தான் கார் மாேதி விபத்து நடந்திருக்கு. எந்த ராேட்டிலும் மக்கள் நடமாட முடியல. மணல் லாரி விருட்டு விருட்டுனு வந்து பயமுறுத்துது. அடிக்கடி இங்கே விபத்து நடக்குது. மணல் லாரியாலதான் அத்தனை விபத்தும் நடக்குது. அதனால, விபத்துகளைக் குறைக்க, மணல் லாரிகளுக்குக் கடிவாளம் பாேடணும்" என்று காேரிக்கை வைத்தனர். தென்னிலை காவல்நிலைய பாேலீஸார், இந்தக் காேர விபத்து பற்றி வழக்குப்பதிந்து, விபத்து எப்படி ஏற்பட்டது என்று தீரமாக விசாரித்துவருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement