Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போலீஸ் பணிக்கு எழுத்துத் தேர்வு - தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது!

தமிழக காவல்துறையில் உள்ள பணியிடங்களுக்கு, இன்று தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வு நடக்க இருக்கிறது. விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த எழுத்துத் தேர்வில்,  6.50 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழக இரண்டாம் நிலை போலீஸார், சிறைத் துறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்புத் துறையில் தீயணைப்பு வீரர் என 15,664 காலிப் பணியிடங்கள் உள்ளன. 

போலீஸ் தேர்வு

காலை 10 மணிக்கு தொடங்கி, பகல் 11.20 மணிக்கு தேர்வு முடிவடைந்துவிடும். காலை 9 மணியில் இருந்து தேர்வு மையங்களில் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சென்னையில், 56 மையங்களில் இந்த எழுத்துத் தேர்வு நடக்கிறது. சுமார்  42 ஆயிரம் பேர் கலந்துகொள்கிறார்கள். சென்னையில் நடக்கும் தேர்வுக் கமிட்டிக்கு, துணை கமி‌ஷனர் ராதிகா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close