Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கன்னியாகுமரி கடல் நடுவே பாலம்! - மத்திய அரசு ஒப்புதல்

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர, படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தையும் திருவள்ளுவர் சிலையையும் பார்த்துவருகிறார்கள். ஆனால், கடல்சீற்றம், கடல் உள்வாங்குதல், நீர்மட்டத் தாழ்வு போன்ற இயற்கை மாற்றங்களின் காரணமாக, திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கடி படகுப் போக்குவரத்து ரத்துசெய்யப்படுகிறது. விவேகானந்தர் மண்டபம் வரையே படகுகள் இயக்கப்படுகின்றன. இதனால், திருவள்ளுவர் சிலைக்கு அருகில் சென்று பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்படுகிறது. எனவே, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும், தமிழ் ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனர்.

கன்னியாகுமரி

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ் சர்மா ஆகியோர், கன்னியாகுமரிக்கு நேரில் வந்து ஆய்வுசெய்தனர். அப்போது, அவரிடம் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், மத்திய சுற்றுலாத்துறையின் கடற்கரைச் சுற்றுலாப் பகுதிகளை மேம்படுத்தும் திட்டமான ‘சுவதேஷ் தர்ஷன்’ என்ற திட்டத்தின் கீழ், கன்னியாகுமரி உள்பட தமிழ்நாட்டிலுள்ள சில சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்காக, மத்திய சுற்றுலாத்துறை தமிழ்நாட்டுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்குவதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின்மூலம் கன்னியாகுமரி கடல் நடுவிலுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே புதிய நடைப்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பாலம், ரூ.15 கோடி செலவில் அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. கடலுக்கு நடுவில் அமையும் நடைபாலம், 95 மீட்டர் நீளத்திலும், கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்படும். 8 ராட்சத தூண்களைக் கடலுக்குள் அமைத்து, இந்தப் பாலம் உருவாக்கப்படும். இந்தப் பாலம் அமைக்கப்படுவதன்மூலம் இயற்கைச் சீற்றம் ஏற்படும் காலங்களிலும் எந்தத் தடங்கலுமின்றி பார்வையாளர்கள் திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement