அசத்தல் இரட்டையர்களின் அசாத்திய மதிப்பெண் பட்டியல் பார்க்கணுமா..? | SSLC marksheet of Tirunelveli twins

வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (20/05/2017)

கடைசி தொடர்பு:10:51 (20/05/2017)

அசத்தல் இரட்டையர்களின் அசாத்திய மதிப்பெண் பட்டியல் பார்க்கணுமா..?

நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய திருநெல்வேலி இரட்டையர்களுக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

நெல்லை மாவட்டம், வள்ளியூர் கிங்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் இரட்டையர்கள் ஜோனிகா வளன், ஜோஷிகா வளன் இருவரும் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். உருவ அமைப்பில் மட்டும் ஒற்றுமையை வெளிப்படுத்தாது பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றும் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

மின்வாரியத் துறையில் அதிகாரியாக இருக்கும் தந்தை, குடும்பத் தலைவியான அம்மா, இருவரும் தங்கள் மகள்கள் பற்றி கூறுகையில், 'சிறு வயதிலிருந்தே இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றதே கிடையாது. இரண்டு குழந்தைகளும் நன்றாகப் படிப்பார்கள். அதனால், சிறந்த மதிப்பெண் பெறுவார்கள் எனத் தெரியும். ஆனால், பொதுத்தேர்வில் இதுபோல ஒரு சாதனை படைப்பார்கள் என யாருமே நினைக்கவில்லை’ எனத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இவர்களின் ஒற்றுமையை இந்த அசாத்திய மதிப்பெண் பட்டியலில் பாருங்கள்..!