பா.ஜ.க-வுடன் கூட்டணியா? ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த மூவ்..! | Will O.Panneerselvam make alliance with BJP?

வெளியிடப்பட்ட நேரம்: 11:08 (20/05/2017)

கடைசி தொடர்பு:12:18 (20/05/2017)

பா.ஜ.க-வுடன் கூட்டணியா? ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த மூவ்..!

'உள்ளாட்சித் தேர்தல்குறித்த அறிவிப்பு வெளியான பின்னரே, பா.ஜ.க-வுடனான கூட்டணிகுறித்து அறிவிக்கப்படும்' என்று ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். அவர் முதல்வராகப் பதவியேற்றது முதல் பா.ஜ.க அரசுடன் மிகவும் இணக்கமாக இருந்துவருகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. நீண்ட ஆண்டுகளாக தமிழகத்தில் தடைசெய்யப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருக்கும்போதுதான் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதாவால் தடைசெய்யப்பட்டிருந்த மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்துக்கும், உதய்மின் திட்டத்துக்கும் பன்னீர்செல்வம் முதல்வராக இருக்கும் காலத்தில் அனுமதியளிக்கப்பட்டது.

இது, பன்னீர்செல்வத்துக்கு பா.ஜ.க-வுடனான இணக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. பன்னீர்செல்வம், முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததற்குப் பிறகும் பா.ஜ.க-வுடன் இணக்கமான உறவையே கடைபிடித்துவந்தார். இந்நிலையில், நேற்று திடீரென பன்னீர்செல்வம் தனது அணியுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வம், 'இது அரசியல்குறித்த சந்திப்பு இல்லை' என்று பேசினார்.

இந்நிலையில், இன்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில், 'உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு, பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்' என்று பதிவிடப்பட்டது. ஆனால், அரைமணி நேரத்தில் அந்த ட்விட்டுக்கு மாற்றுக் கருத்து அளிக்கும் வகையில், 'உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகே எந்தக் கட்சியுடன் கூட்டணி என்று தெரிவிக்கப்படும்' என்று ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.