Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சட்டவிதிகளை மீறி மெரினாவில் கூடினால் கைது : காவல்துறை எச்சரிக்கை

ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்துக்குப் பிறகு மெரினா கடற்கரையில், காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டது. குறிப்பாக, அனுமதியின்றி அங்கு யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Marina


பின், மெரினாவில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது. ஆனாலும், காவல்துறையின் கெடுபிடிகள் குறையவில்லை. இந்நிலையில், மெரினா கடற்கரையில் சட்ட விதிகளை மீறி, கூடுவோர் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கூறியுள்ளது.


மெரினாவில் சட்டவிதிகளை மீறி குழுவாக கூட்டங்களை நடத்தக்கூடாது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவாக, மே 17 இயக்கம் சார்பில், மெரினாவில் அஞ்சலி கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.


இதற்கிடையே, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பில், மெரினாவில் நினைவேந்தால் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு, சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement