தமிழகத்தில் தி.மு.கதான் ஆளுங்கட்சி... : ஸ்டாலின் பேட்டி!

பருவமழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டு, ஏரி குளங்கள் வற்றி நீரின்றி காணப்படுகின்றன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை தூர் வாரும் பணிகளை, கடந்த சில தினங்களுக்கு முன் தி.மு.க செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின், தனது கொளத்தூர் தொகுதியில் துவங்கி வைத்தார்.

Stalin


பின், தமிழகம் முழுவதும் தினசரி பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று தூர்வாரும் பணிகளை, ஸ்டாலின்  தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், தண்டலத்தில், கோயில் குளம் தூர்வாரும் பணியை மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

பின் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "குடிநீர் ஆதாரங்களை தூர்வார அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களின் குடிநீர் பிரச்னை குறித்து தமிழக அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை. தமிழக மக்களின் பிரச்னையை தீர்க்க, தி.மு.க தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தி.மு.க-வைத்தான் ஆளும்கட்சியாக தமிழக மக்கள் பார்க்கிறார்கள். 

Stalin


பன்னீர்செல்வத்துக்கு நேரம் ஒதுக்கும் பிரதமர் மோடியால், எனக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.  விவசாயிகள் பிரச்னை குறித்து சந்திப்பதற்காக, எனக்கு பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை" என்றார். 


இதற்கிடையே பன்னீர்செல்வம், மோடியைச் சந்தித்ததற்கான காரணம் தெரியவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!