வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (21/05/2017)

கடைசி தொடர்பு:18:10 (21/05/2017)

சசிகலாவை நீக்க இதுதான் வழி.. சொல்கிறார் தம்பிதுரை!

அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவது குறித்து பொதுக்குழுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.கவின் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று தெரிவித்துள்ளார்.

thambidurai
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க இரண்டாக பிரிந்தது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் உள்ள இரு அணிகளும் மீண்டும் ஒன்றிணையும் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளனர். அ.தி.மு.க இரு அணிகளும் ஒன்றிணைய சசிகலா, டிடிவி.தினகரன் குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் அணியினர் நிபந்தனை விதித்தனர். இதனையடுத்து சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து விலக்கி வைத்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி அணி தெரிவித்தது.  இரு அணிகளும் அ.தி.மு.க இணைப்பு குறித்து இரு அணிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன், ’எடப்பாடி பழனிசாமி அணி சசிகலாவை விலக்கி வைத்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை சந்திக்கிறார். இதன்மூலம், அவர்கள் நல்ல நாடகம் ஆடுகிறார்கள் எனத் தெரிகிறது’ என்றார்.

மைத்ரேயன் இவ்வாறு பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை  ’அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவது குறித்து பொதுக்குழுதான் முடிவு எடுக்க வேண்டும்.  அதிமுக பொதுக்குழு கூட வேண்டுமென்றால் இரு அணிகளும் விரைவில் இணைய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க