வெளியிடப்பட்ட நேரம்: 09:33 (22/05/2017)

கடைசி தொடர்பு:11:30 (22/05/2017)

விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றிய கனிமொழி...!

விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளார், தி.மு.க எம்பி., கனிமொழி.

Kanimozhi


திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில், பள்ளி ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவுக்காக நேற்று முன்தினம் நெல்லை சென்றார் கனிமொழி. விழா முடிந்து, அங்கு ஒரு பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு, நேற்று தேனி வந்தார். இதையடுத்து, தேனி மாவட்டத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு, மாலை 5 மணி விமானத்தைப் பிடிப்பதற்காக மதுரைக்குப் புறப்பட்டார்.


மதுரை போகும் வழியில்,  ஓரிடத்தில் சிலர் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். அதைப் பார்த்த கனிமொழி, காரை நிறுத்தச் சொன்னார்.  அங்கு, விபத்தில் ஒருவர் அடிபட்டுக் கிடப்பதைப் பார்த்ததும், உடனே அவரைத் தனது மாவட்டச் செயலாளர் ஒருவரின் காரில் எடுத்துச் சென்று, மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் கனிமொழி.


குறிப்பாக, 'அவரது உடல்நிலைகுறித்த தகவலை எனக்கு அளிக்க வேண்டும்' என்று மாவட்ட நிர்வாகிகளுக்குக் கனிமொழி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.