கருணாநிதி வைர விழாவில் யாரெல்லாம் பங்கேற்கின்றனர்? மு.க.ஸ்டாலின் பதில்! | Karunanidhi's Birthday Bash : RahulGandhi to attend the function

வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (22/05/2017)

கடைசி தொடர்பு:13:39 (22/05/2017)

கருணாநிதி வைர விழாவில் யாரெல்லாம் பங்கேற்கின்றனர்? மு.க.ஸ்டாலின் பதில்!

தி.மு.க தலைவர் கருணாநிதியின் வைர விழாவில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓ பிரையன், நாராயணசாமி, காதர் மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

karunanithi
 

கருணாநிதி, முதன்முதலில் 1957ஆம் ஆண்டு குளித்தலைத் தொகுதியிலிருந்து  சட்டமன்றத்துக்குத் தேர்வுசெய்யப்பட்டார். அவர், சட்டமன்றத்துக்கு வந்து இந்த ஆண்டுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட தி.மு.க முடிவுசெய்துள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் முன்றாம் தேதி, வைரவிழா நடத்த உள்ளனர்.

இந்த விழாவுக்கு, பல மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க-வை மட்டும் அழைக்கவில்லை. ‘திராவிடக் கட்சிகளை அழிக்க நினைக்கும் பா.ஜ.க-வை ஏன் வைர விழாவுக்கு அழைக்க வேண்டும்’ என்று ஸ்டாலின் விளக்கம் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், ‘ கருணாநிதியின் வைர விழாவில்  ராகுல் காந்தி, நிதிஷ்குமார், சீதாராம் யெச்சூரி, பரூக் அப்துல்லா,லாலு, டி.ராஜா, சரத்பவார் ஆகியோர் பங்கேற்கின்றனர். வைர விழா, அரசியல் ரீதியானது கிடையாது’ என்றார்.

கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்துவருவதால், அவர் வைரவிழாவில் கலந்துகொள்வது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க