முதல்வர் பழனிசாமிக்கு, அ.தி.மு.க அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் வைத்த அதிரடி கோரிக்கை! | ADMK MLA's met TN CM Palanisamy, sources

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (22/05/2017)

கடைசி தொடர்பு:13:46 (23/05/2017)

முதல்வர் பழனிசாமிக்கு, அ.தி.மு.க அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் வைத்த அதிரடி கோரிக்கை!

அ.தி.மு.க.வின் இரண்டு அணிகள் இணைவது குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி இருக்கும் நிலையில், அக்கட்சியை சேர்ந்த செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட எட்டு எம்.எல்.ஏ.க்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வந்துள்ளது. மேலும், அவர்கள் உடனடியாக, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாகவும் முதற்கட்ட தகவல் வந்துள்ளது.

இதனிடையே, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அறையில் தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.


எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவை அவைத் தலைவர் தனபால் மற்றும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோரிடம் சட்டப்பேரவையைக் கூட்ட தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அ.தி.மு.க. அம்மா அணியின் சட்டமன்ற உறுப்பினர்களில் சிலரே 'எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்ட அழைப்பு விடுக்கப்பட வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளதாக வந்துள்ள தகவல், தமிழக அரசியல் களத்தை மறுபடியும் பரபரப்பான சூழலை நோக்கி நகர்த்தியுள்ளது.