ஏ.டி.எம். கார்டில் வைரஸ் எனக் கூறி பொதுமக்களின் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்!

ஏ.டி.எம் கார்டில் ரேன்சம்வேர் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி சென்னையில் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

virus

உலகம் முழுவதிலும் ரேன்சம்வேர் தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 150 நாடுகள் இந்த வைரஸ் தாக்குதலில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே சென்னை மணலியை அடுத்த பழைய நாப்பாளையம், லட்சுமிநகர் பகுதியைச் சேர்ந்த பலருக்கும் இன்று ஒரு போன் வந்துள்ளது. 'நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்கள் ஏ.டி.எம். கார்டில் 'ரேன்சம்வேர்' என்கிற வைரல் தாக்குதல் ஏற்பட்டிருக்கிறது,  அதை அப்படியே விட்டால் அது உங்கள் உடலையும் பின் உங்கள் குடும்பத்தையும் தாக்கி விடும். முதலில் அதை பக்காவாக சுத்தம் செய்யவேண்டும். உங்கள் கார்டு நம்பரைச் சொல்லுங்க' என மர்மநபர் ஒருவர் கேட்டுள்ளார்.

பயத்தில் ஆளாளுக்கு அவர்களின் ஏ.டி.எம். கார்டு நம்பரைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் நம்பரைக் கொடுத்த இருபதாவது நிமிடமே ஆன் லைனில் அவர்கள் கணக்கில் இருந்து பெரிய தொகைக்கு பொருள்கள் வாங்கப்பட்டதாக மெசேஜ் வந்திருக்கிறது. இதையடுத்து பொதுமக்கள் அருகிலுள்ள மணலிபுதுநகர் காவல் நிலையத்துக்கு  புகார்மனுவோடு  போயிருக்கிறார்கள். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஓய்வில் இருப்பதால் 'மாலை ஆறுமணிக்கு மேல் வந்து அய்யாவைப் பாருங்கள்' என்று அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!