வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (23/05/2017)

கடைசி தொடர்பு:09:04 (24/05/2017)

குழந்தைகளின் பயம் போக்கும் 10 வழிமுறைகள்!

குழந்தை

குழந்தைகள் இருட்டு, இடி, தனியாக பாத்ரூம் செல்ல, தேர்வு எழுத எனப் பலவிஷயங்களுக்குப் பயப்படுவார்கள். எதற்கு பயப்டுகிறார்கள் என்பதை அறிந்து பயத்தை நீக்கி, தன்னம்பிக்கையை அளிப்பது பெற்றோரின் கடமை. குழந்தைகளின் பயத்தைப் போக்குவதற்கான 10 வழிகள்.

* பாதுகாப்பு உணர்வை பலப்படுத்துங்கள்: குழந்தைகளைச் சுற்றி அனைத்துமே நன்றாக சென்றுக் கொண்டிருக்கிறது என்ற உணர்வை பெற்றோர் வளர்க்க  வேண்டும். அனைத்து சூழல்களிலும் பெற்றோர் உடன் இருப்பார்கள் என்ற பாதுகாப்பு உணர்வை குழந்தைகள் மனதில் பதியும்படி செய்ய வேண்டும்.

* பயத்தின் பின்னுள்ள உண்மையை விளக்குங்கள்: டி.வி.பார்க்கும்போதோ, கேம் விளையாடும் போதோ, மொபைல் வீடியோ பார்க்கும் போதோ சிலக் காட்சிகளைக் கண்டு பயப்படலாம். அச்சமயத்தில் எவ்வாறு அக்காட்சிகள் உருவாக்கப்படுகின்றன என்பன பற்றியும், அதன் பின் செயல்படும் தொழில்நுட்பம் பற்றியும் விளக்கிக் கூறுங்கள்

சிறுவன்

* பயத்தின் காரணத்தை அறியுங்கள்: பயத்தை சொல்லத் தெரியாமல் அழத் துவங்குவார்கள். அச்சமயங்களில் கைகளைப் பிடித்து, சமாதானம் செய்து எதனால் பயம் ஏற்படுகிறது என்பதை குழந்தைகள் வாயாலேயே சொல்ல அனுமதித்து நிவர்த்தி செய்யுங்கள். எடுத்துக்காட்டாக இருட்டில் செல்ல பயம் என்றால் இருட்டில் ஒன்றும்  இல்லை என்பதை எடுத்துக்கூறி டார்ச் அடித்து ஒன்றுமே இல்லை என்பதை நிரூபணம் செய்யுங்கள்.

* ரிலாக்ஸ் செய்ய உதவுங்கள்: தற்போதுள்ள நவீனச் சூழல் குழந்தைகளுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மனஅழுத்தத்திலிருந்து விடுபட ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி உதவும். இதற்கு குழந்தைகளைப் பழக்கப்படுத்த வேண்டும். இதற்கு பெற்றோர் ரோல் மாடலாக இருக்க வேண்டும்.

* பணிகளைச் சரியாகச் செய்ய பழக்கப்படுத்துங்கள்: சில குழந்தைகள் ஹோம்ஒர்க்கை சரியாகச் செய்யாமல் மிஸ் அடிப்பார்கள் என பயப்படுவார்கள். தேர்வு என்றதும்  அவர்களை அறியாமல் பயம் தொற்றிக் கொள்ளும். ஒழுங்காக ஹோம்ஒர்க் செய்தால் பயப்பட அவசியமில்லை என்பதை நடைமுறைப்படுத்துங்கள். பாடங்கள் மறக்காதபடி படித்து எழுதி பார்த்தால் தேர்வைக் கண்டு அச்சப்பட வேண்டியதில்லை என்பதையும் உடனிருந்து வழிகாட்டுங்கள். 

* தன்னம்பிக்கையை ஏற்படுத்துங்கள்: உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைக்க எப்போதும் பாசிடிவ் சிந்தனைகளை வளர்க்க குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். பாசிடிவ் சிந்தனைகளை வளர்த்து, தன்னம்பிக்கையை ஏற்படுத்த அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் உதவியாக இருக்கும். உடன் அமர்ந்து படிக்க வைப்பதன் மூலம் நல்ல மாற்றம் ஏற்படுவதை உணரலாம்.

* பேய் பயத்தைப் போக்குங்கள்: பேய் படங்கள், கதைகள் பார்ப்பது, கேட்பது சுவாரஸ்யமாக இருக்கும். அதன் பின்னர் ஆழ்மனதில் அதனையே  நினைப்பதால் தூக்கத்தில் காரணமில்லாமல் அழுவார்கள். அச்சமயங்களில் கட்டி அணைத்து நீங்கள் உடனிருப்பதை உணர்த்துங்கள். பின்னர் உலகில் பேய் என எதுவுமில்லை எனத் தைரியம் அளியுங்கள். அதோடு, படங்களில் வருவது போல் கடவுளோ, மாவீரனோ வந்து பேயை அழித்து விடுவார் என்பதையும் கற்பனை செய்ய உதவுங்கள்.

* அறிவுமுதிர்ச்சிக்கேற்ப பதில் கூறவேண்டும்: குழந்தைகளின் வயதின் தன்மைக்கேற்ப, மனமுதிர்ச்சிக்கேற்ப ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். அதே போல் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்பகத்தன்மையான பதிலை அவர்களுக்குப் புரியும் விதத்தில் சொல்வதன் மூலம் பயத்திலிருந்து விடுபடுவார்கள். 

 குழந்தை

* கண்காணிப்பு அவசியம்: தொடர்ந்து குழந்தைகள் காரணமில்லாமல் பயந்து ஆர்ப்பாட்டம் செய்தால் கொஞ்சம் கவனமாக இருங்கள். குழந்தைகளின் சுற்றுப்புறம், நட்பு வட்டம் என அனைத்தையும் கண்காணித்து வழிநடத்த வேண்டும். குழந்தைகள் மனஅழுத்தம், தோல்வி, பயத்தால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்குப் பிடித்த இடத்திற்கு அழைத்து சென்றோ, பரிவாகக் கட்டி அணைத்து பேசியோ அவர்களின் மனநிலையை மாற்ற வேண்டும். தேவைப்பட்டால் மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் செல்ல தயங்க வேண்டாம். 

* சுயமாக முடிவெடுக்க பழக்குங்கள்: குழந்தைகள் எச்செயலைச் செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதையும், அதே நேரத்தில் அதன் முடிவு பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்பதையும் வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் தேவையில்லாத பயம், டென்ஷன் தானாகவே குறைந்து விடும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்