வெளியிடப்பட்ட நேரம்: 16:01 (23/05/2017)

கடைசி தொடர்பு:16:00 (23/05/2017)

'கணவனிடமிருந்து மகளைக் காப்பாற்றிய தாய்!’ - சென்னை சம்பவம்

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவரை போலீஸில் பிடித்துக் கொடுத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த துணிச்சல் பெண். 

சென்னையைச் சேர்ந்தவர் சுரேந்திரகுமார். இவரது மனைவி கண்மணி (பெயர் மாற்றம்) இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேந்திரகுமார், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றுகிறார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். இந்தநிலையில் சுரேந்திரகுமார் வீட்டில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இதுகுறித்து தேனாம்பேட்டை மகளிர் போலீஸார் கூறுகையில், "எங்களுக்கு சைல்டு ஹெல்ப் லைனிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள், வள்ளுவர்கோட்டத்திலிருக்கும் ஒரு குடும்பத்தில் 12 வயது சிறுமியிடம் அவரது தந்தை தவறாக நடப்பதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தனர். சைல்டு ஹெல்ப் லைன் கொடுத்த முகவரிக்குச் சென்று விசாரித்தோம். அங்கு கண்மணி என்பவர் இருந்தார். அவர், தன்னுடைய கணவரே மகளிடம் தவறாக நடப்பதாக தெரிவித்துக் கதறினார். இதையடுத்து சுரேந்திரகுமாரைப் பிடித்து விசாரித்தோம். அவரும் செய்த தவறை ஒப்புக் கொண்டார். குடிபோதை எல்லாத்தையும் மறக்கவைத்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சுரேந்திரகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர். 

தேனாம்பேட்டை போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "சுரேந்திரகுமார், வடமாநிலத்தைச் சேர்ந்தவர். அவர், சென்னையில் கடந்த 59 ஆண்டுகளாக குடியிருந்துவருகிறார். குடித்துவிட்டு வரும் சுரேந்திரகுமார், தன்னுடைய மகளை மிரட்டியே இந்த படுபாதகச் செயலைச் செய்துள்ளார். முதலில் மிரட்டலுக்குப்பயந்து நடந்த சம்பவத்தை அந்தசிறுமி வெளியில் சொல்லவில்லை. இதன்பிறகு சுரேந்திரகுமாரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால், சிறுமி மனதளவிலும் உடலஅளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தாயிடம் சொல்லத் தயங்கிய சிறுமி, தன்னுடைய சகோதரனிடம் நடந்த சம்பவத்தை சொல்லி கதறியுள்ளார். இதன்பிறகு சிறுமியின் சகோதரன், தன்னுடைய தாயிடம் முழுவிவரத்தையும் சொல்லி இருக்கிறார். கணவன் செய்யும் தவறை கையும் களவுமாகப் பிடிக்க திட்டமிட்ட கண்மணி, அதற்காக காத்திருந்துள்ளார். வழக்கம் போல எல்லோரும் தூங்கியபிறகு சிறுமியை தொந்தரவு செய்துள்ளார் சுரேந்திரகுமார். அப்போது, கண்மணி, சுரேந்திரகுமாரை கடுமையாக திட்டியதோடு ஆத்திரம்தீர அடித்துஉதைத்தார். இதன்பிறகே, துணிச்சலாக ஒரு முடிவை எடுத்து சைல்டு ஹெல்ப் லைனில் தொடர்பு கொண்டு சம்பவத்தை சொல்லியுள்ளார்.

போலீஸ் நிலையத்தில் கண்மணியிடம், 'என்னை இந்த ஒருமுறை மன்னித்துவிடு..நான் இனிமேல் தவறு செய்யமாட்டேன்' என்று கதறிய சுரேந்திரகுமாரை அவர் மன்னிக்கவில்லை. மேலும், அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று உறுதியாக தெரிவித்ததோடு அதுதொடர்பாக புகாரும் கொடுத்தார். பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் தனியாக விசாரணை நடத்தினோம். அவர்களின் எதிர்காலம் கருதி பெயர், முகவரியை வெளியிடவில்லை" என்றார்.  


டிரெண்டிங் @ விகடன்