வெளியிடப்பட்ட நேரம்: 10:16 (24/05/2017)

கடைசி தொடர்பு:14:43 (24/05/2017)

ரயில் பாதையில் கார் விழுந்து விபத்து: ஊட்டி மலைரயில் சேவை பாதிப்பு

car

நீலகிரி மலைரயில் போக்குவரத்து, உலகப் பிரசித்திபெற்ற ஒன்று. ஆனால், ரயில் பாதையில் ஏற்படும் பழுது, மண் சரிவு, விபத்துகள் போன்ற காரணங்களால் அடிக்கடி மலைரயில் சேவை பாதிக்கப்பட்டுவருகிறது. சமீபத்தில், தொடர்ச்சியாக இரண்டு நாள்களுக்கு மேல் ஊட்டி மலைரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று குன்னூர் - ஊட்டி இடையிலேயான பகுதியில் மலைரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கேத்தி ரயில் நிலையம் அருகே, ரயில் பாதையில் கார் விழுந்து விபத்துக்குள்ளானதால், ரயில் சேவை தற்காலிமாக முடங்கியுள்ளது. இதனால், மலைரயில் சேவையைப் பயன்படுத்திவரும் பயணிகள், கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

ooty car

ரயில் பாதையில் விழுந்த காரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. விரைவில் ரயில் போக்குவரத்து தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கார் விபத்துகுறித்து விசாரணையும் நடைபெற்றுவருகிறது. 

படங்கள்: மு.ராஜேஷ்