தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி அடமானம் வைக்கப்பட்டுள்ளது: சீமான் காட்டம் | Seeman comments on Tamilnadu Politics

வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (24/05/2017)

கடைசி தொடர்பு:11:36 (24/05/2017)

தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி அடமானம் வைக்கப்பட்டுள்ளது: சீமான் காட்டம்

'தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி அடமானம் வைக்கப்பட்டுள்ளதால், பா.ஜ.க ஆட்சிதான் நடக்கிறது' என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

சீமான்


சென்னை எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த சீமான், பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ‘தமிழகத்தில் பா.ஜ.க-வின் ஆட்சிதான் நடக்கிறது. எப்போதும் தமிழர்களைத் தமிழர்கள்தான் ஆள வேண்டும். ஆனால், இங்கு தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க-வின் ஆட்சி பா.ஜ. கட்சியிடம் அடமானத்தில் உள்ளது’ என்றார்.

மேலும், தமிழகம்குறித்து சீமான் குறிப்பிடுகையில், ‘தமிழகத்துக்கு கர்நாடகாவிலிருந்து தண்ணீர் மட்டும் வராது. ஆனால், கர்நாடகத் தலைவர்கள் தமிழகத்துக்கு வந்து செல்வார்கள்’ என்று தெரிவித்தார்.