Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘எஸ்.ஜே.சூர்யா வற்புறுத்தினார்... அதனாலேயே சினிமாவில் நடித்தேன்!’ - அர்ச்சனா

அர்ச்சனா

தமிழில் இருக்கும் ஒவ்வொரு டி.வி சேனலிலும் ஒவ்வொரு அர்ச்சனா உண்டு. அந்த ஒவ்வொரு அர்ச்சனாவுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. 'காமெடி டைம்' அர்ச்சனா, 'ஆதித்யா' அர்ச்சனா என்கிற இந்த வரிசையில், மக்கள் மனதில் இடம்பிடித்தவர் சன் டி.வி 'சினிமா செய்திகள்' அர்ச்சனா. கடந்த 16 வருடங்களாகப் பல தொகுப்பாளர்களுக்கு மத்தியில் தனித்தன்மையுடன் வலம் வருபவர். தற்போது, கேப்டன் டி.வியில் 'வாழ்வில் வசந்தம்' நிகழ்ச்சியையும், வேறு சேனல்களில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். அவருடன் ஒரு சந்திப்பு... 

“நீங்கள் இந்தத் துறைக்கு வந்து 16 வருஷம் ஆச்சா?” 

“எனக்கும் அதே ஆச்சர்யம்தான். 16 வருஷம் போனதே தெரியலை. பிளஸ் டூ படிக்கும்போது தூர்தர்ஷனில் ஒரு நிகழ்ச்சிக்கு ஆள் கிடைக்கலைனு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தாங்க. அதைப் பிடிச்சுக்கிட்டு 'சினி சிற்பிகள்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். அப்புறம், ஜெயா டி.வி யில் 'இனிய இல்லம்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். இப்படித்தான் 2000 ஆம் ஆண்டு ஆரம்பிச்ச பயணம் இப்போது வரைக்கும் நிறைய விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்துட்டே இருக்கு.”

“இதுவரை அதிக அளவு டேக் எடுத்த நிகழ்ச்சி எது?” 

“அது எண்ணிக்கையில் அடங்காதே. சன் டி.வியின் முதல் நிகழ்ச்சிக்கே ஏழு ஆடிசன் வெச்சாங்கன்னா பார்த்துக்கோங்க. எனக்கு ஸ்கூல்ல இரண்டாவது மொழிப் பாடம் இந்தி. அதனால், தமிழ் அந்த அளவுக்கு வராது. ழ, ள, ல போன்ற எழுத்துகளை உச்சரிக்கிறது கஷ்டமாக இருக்கும். அந்த வார்த்தைகளை உச்சரிக்க நான் பட்டப்பாடு இருக்கே... இப்போ நினைச்சாலும் பயம் வருது. அதைச் சரிசெய்துக்க வீட்டுக்குப் போனதும் அப்பாக்கிட்டே ( வி.பி.மணி - சினிமா பி.ஆர்.ஓ) கொடுத்து வாசிக்கச் சொல்லுவேன். அவர் படிக்கும்போது உண்டாகும் ஏற்றஇறக்கம், உச்சரிப்பை நல்லா கவனிச்சுப்பேன். அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழைப் படிக்க ஆரம்பிச்சேன். இப்போ தமிழை சரளமாகப் பேசக் காரணம், என் அப்பாதான்.” 

“சினிமா செய்திகள் என்றாலே உங்கள் ஞாபகம் வரும் அளவுக்கு நீங்க செஞ்ச மேஜிக் என்ன?” 

“நான் எப்பவுமே என்னை தனித்துவமாக காண்பிச்சுக்க நினைப்பேன். யாரையும் ஃபாலோ பண்ணக் கூடாது. நமக்குனு தனி இடத்தை உருவாக்கணும்னு என்பதில் உறுதியா இருப்பேன். சினிமா செய்திகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது இடைவேளையின் போது சொல்லும் 'காத்திருங்க' என்பதை ஆதித்யா டி.வியில் இமிட்டேட் செய்து நடிச்சாங்க. அதைப் பார்த்ததும் பெருமையாக இருந்துச்சு. இதுபோல நிறைய இடங்களில் இப்படி இமிடேட் செய்றதைப் பார்த்திருக்கேன்.” 

“அப்போ உங்களுக்கு ரோல்மாடல் யாரும் இல்லையா?” 

“நான் இதுவரைக்கும் யாரையும் ரோல்மாடலாக நினைச்சது இல்லை. விஜய் டி.வியின் டிடியை பிடிக்கும். எவ்வளவு கஷ்டமான சூழலையும் அவங்க அழகா சமாளிச்சுடுவாங்க. அவங்களோட சுறுசுறுப்பு, நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டு பேசும் திறன் இதெல்லாம் எனக்குப் பிடிக்கும். சில சமயங்களில் அவங்க செய்யும் விஷயங்களை மனசுல எடுத்துக்குவேன்.” 

அர்ச்சனா

“நிறைய சீரியல்களில் நடிச்சீங்க... அதை ஏன் தொடரலை?” 

“சன் டி.வியில் ஒளிபரப்பான 'அரசி', 'மேகலா', 'சூரியவம்சம்', 'ரேகா ஐ.பி.எஸ்' போன்ற சீரியல்களில் நடிச்சேன். பிறகு, போத்தீஸ், சரவணா ஸ்டோர்ஸ் என நிறைய விளம்பரங்கள், மேடை நிகழ்ச்சித் தொகுப்பு, ஆடியோ லாஞ்ச் என செய்ய ஆரம்பிச்சேன். இதோடு, என் குழந்தை அனன்யாவுக்கு அம்மாவாகவும் பரபரப்பான வேலைகளில் மூழ்கிட்டேன். அதனால்தான் தொடர்ந்து சீரியல்களில் நடிக்க முடியலை. நேரம் கிடைக்கும்போது நடிக்கும் எண்ணம் இருக்கு.'' 

“உங்களோட அப்பாவைப் பார்த்து நிறைய வாய்ப்புகள் வந்ததுனு சொல்லலாமா?” 

“கண்டிப்பாக இல்லை. ஆரம்பத்தில் தூர்தர்ஷன், சன் டி.வியில் சேர்ந்தது அவரது வழிகாட்டுதலாக இருந்தாலும், இத்தனை வருஷங்கள் பீல்டுல இருக்க முடியாது. என்னுடைய கடின உழைப்பு மட்டுமே இதுக்குக் காரணம். என் அப்பாவோ, எந்த இடத்திலும் நான் இவரின் மகள் எனச் சொல்லி வாய்ப்பு கேட்டதில்லை. நெருங்கியவர்கள் மட்டும் தெரிஞ்சுக்கிட்டு 'மணி பொண்ணுதானே நீங்க' என கேட்பார்கள்.”

“இவ்வளவு திறமைகள் இருந்தும் ஏன் சினிமாவில் பெரிய வேடங்களில் நடிக்கலை?” 

“எனக்கு சினிமாவில் ஈடுபாடு இல்லை. ஏன்னு சொல்லத் தெரியலை. எஸ்.ஜே.சூர்யா சார் ‘இசை’ படத்தில் நடிக்க வற்புறுத்தி கேட்டதால் ஒத்துக்கிட்டேன். 'இந்தப் படத்தில் நடிக்கப் பயப்பட வேண்டாம். நீங்க இப்போ என்ன வேலை செய்றீங்களோ அந்தத் தொகுப்பாளர் கதாபாத்திரம்தான் செய்யப்போறீங்க'னு சொன்னதால் நடிச்சேன். அதற்குப் பிறகு 'இறைவி' படத்திலும் தொகுப்பாளர் கதாபாத்திரம். அதனால் நடிச்சேன். மத்தப்படி எனக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இல்லை.'' 

''இத்தனை வருஷங்களாக தொடர்ந்து இந்தத் துறையிலேயே இருக்கிறது போர் அடிக்குதா?'' 

“வாழ்க்கையில் நாம் எதை நேசித்துச் செய்கிறோமோ அது நிச்சயம் போர் அடிக்காது. நாம் பார்க்கும் வேலையில் சறுக்கல்களும், தோல்விகளும் அடிக்கடி வரலாம். நானும் அதையெல்லாம் சந்திக்கிறேன். ஆனாலும், டி.வி. பிடித்த விஷயம் என்பதால், இந்தத் துறையில் என்னை ஒவ்வொரு முறையும் நிரூபிச்சுக்கிட்டே இருக்கேன்.” 

“இத்தனை வருஷங்களுக்குப் பிறகும் நிகழ்ச்சியில் பேசறதுக்கு முன்னாடி ஹோம்வொர்க் பண்றீங்களா?” 

“எப்பவுமே எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதுக்கு முந்தைய நாள் ஹோம்வொர் பண்ணிட்டுத்தான் போவேன். யாரைப் பற்றிப் பேசப்போறோமோ அவரைப் பற்றி நல்லாத் தெரிஞ்சுப்பேன். இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பெஸ்ட்டை கொடுக்கப் பார்ப்பேன்.” 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement