Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியை எடப்பாடி சந்தித்தது இதற்காகத்தான்! சொல்கிறார் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியைச் சந்தித்ததன் பின்னணி குறித்து இன்று பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார் தி.மு.க-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஸ்டாலின்


சென்னை பள்ளிக்கரணை அருகே ஜல்லடையான்பேட்டையில் குளம் தூர்வாரும் பணி தி.மு.க-வின் சார்பில் நடந்துவருகிறது. இதை  ஆய்வு செய்ய வந்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘டெல்லியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியைச் சந்தித்தது முற்றிலும் அரசியல் ரீதியானது. பிரதமர் மோடி அ.தி.மு.க-வின் இரு அணிகளுக்கிடையே கட்டப்பஞ்சாயத்து செய்வதுபோல்தான் செயல்படுகிறார்’ எனக் கூறினார்.


மேலும், திமுக-வின் செயல்பாடுகள் குறித்து பேசிய ஸ்டாலின், ‘சென்னையில் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க திமுக-வின் சார்பில் குளங்கள் தூர்வாரப்பட்டுவருகின்றன. திமுக-வுக்குப் புகழ் சேர்ந்துவிடும் என்பதால் கட்சியின் செயல்பாடுகளை பிற கட்சிகள் விமர்சனம் செய்கின்றன’ எனக் கூறினார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement