Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆன்லைன் மூலம் மீன் விற்பனை... அரை மணி நேரத்தில் டெலிவரி..! அமைச்சர் அதிரடி அறிவிப்பு

சென்னையில், ஆன்லைன்மூலம் மீன் விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அரை மணி நேரத்தில் டெலிவரி செய்யப்படும் எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.

Jayakumar

ஆன்லைன்மூலம் மீன் விற்பனையை, நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை பட்டினப்பாக்கத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை கலெக்டர் அன்புசெல்வன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,  "மீன் உணவு வகைகள் இதயநோய் வராமல் தடுக்கின்றன. ஆரோக்கியமான உணவான மீன் உணவுப்பொருள்கள், ஆன்லைன்மூலம் விற்பனைசெய்யப்படுவது இன்று முதல் சென்னை மாநகரில் தொடங்கப்பட்டுள்ளது. மீன்கள் மட்டுமல்ல, மீன்கள் சார்ந்த மற்ற பொருள்களை, டெலிபோன் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் பெறலாம். www.meengal.com என்ற இணையதளம் மற்றும் 044- 24956896 தொலைபேசி எண்ணில் ஆர்டர் செய்யலாம். இது 10 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒரு மென்பொருளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஐந்து மையங்கள் உள்ளன. சென்னை மக்களுக்கு மீன் உணவு வகைகள் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள பகுதிகளுக்கு, குறைந்தபட்சம் 500 ரூபாய்க்கு ஆர்டர் தரலாம்.  இதற்கு, போக்குவரத்துக் கட்டணமாக, 35 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் டெலிவரி செய்யப்படும். இந்தத் திட்டம் விரைவில், மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும்" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement