Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு செக் வைத்தது நீதிமன்றம்!

திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்தவர் லோகநாதன். சூரிய மின்சாரத் திட்டத்துக்கு அனுமதி வாங்கித்தர, ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலப்பத்திரங்களை லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்தவருமான நத்தம் விஸ்வநாதன், அருண்குமார், பாஸ்கரன், காமராஜ் ஆகிய நான்கு பேர் மீது திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் லோகநாதன் வழக்குத் தொடர்ந்தார்.

Natham Vishwanathan


இந்த வழக்கு, திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டுமென்று, கே.கே.நகர் போலீஸுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement