Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

 'என் மனைவி ஆசைப்பட்டால் ஜெயிலுக்குப் போகவும் தயார்!' -தாடி பாலாஜி உருக்கம் 

நடிகர்  பாலாஜி

என் மனைவி ஆசைப்பட்டால் அவருக்காக ஜெயிலுக்குப் போகவும் தயார் என்று நடிகர் தாடி பாலாஜி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 நடிகர் தாடி பாலாஜி குறித்து அவரது மனைவி நித்யா மாதவரம் போலீஸில் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், 'என்னைச் சாதி சொல்லி தாடி பாலாஜி திட்டுகிறார், குழந்தையும் என்னையும் கொடுமைப்படுத்துகிறார்' என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் மாதவரம் போலீஸார் தாடி பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். அடுத்து, பாலாஜியிடம் இருந்த குழந்தையையும் நித்யாவிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் இருந்துவரும் நேரத்தில் தாடி பாலாஜி, தன்னையும், குழந்தையையும் எப்படியெல்லாம் டார்ச்சர் செய்தார் என்று நித்யா நம்மிடம் தெரிவித்தார். அந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து பாலாஜியிடம் கேட்டோம். முதலில் கொஞ்சம் கோபப்பட்ட அவர், அதன்பிறகு அதற்கு விரிவாக விளக்கம் அளித்தார். 

 "நான் அவரை காதலித்துத்தான் திருமணம் செய்தேன். காதலிக்கும்போதே எனக்கு அவருடைய சாதி எனக்குத் தெரியாதா. சாதி மறந்து அவரை கரம்பிடித்தேன். சாதிச் சொல்லி அவரைத்திட்டியதாக சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை. என்னுடைய மகளின் சாதி சான்றிதழில் என் மனைவியின் சாதியைத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. யாராக இருந்தாலும் சாதி சோறு போடாது. என்னைப் பொறுத்தவரை, எனக்கு எல்லோரும் நண்பர்கள். யாரையும் நான் பிரித்துப் பார்த்தது கிடையாது. 


என் மனைவியை வெளிநாடுகளில் நடந்த சூட்டிங் இடங்களுக்கும் அழைத்துச் சென்றுள்ளேன். அந்தளவுக்கு அவர் மீது பாசம் வைத்திருந்தேன். என் மனைவிக்கு நான் கொடுத்த சுதந்திரத்தை அவர் தவறாக பயன்படுத்தியது எனக்குப்பிடிக்கவில்லை. 
நான் ஒரு நடிகன். நடிகன் என்பதற்காக பொறுக்கிப் போல நான் நடந்தால் என்னைச் சும்மா விட்டுவிடுவார்களா. நான் புத்தர், காந்தி, ஏசு என்று சொல்லவில்லை. டிரிங்ஸ் பண்ணுவேன் என்று ஓப்பனாக சொல்லியிருக்கிறேன். நாங்கள் இருவரும் கஷ்டப்பட்டு உழைத்துதான் வீட்டை கட்டினோம். நிமிடத்துக்கு நிமிடம் இது என்னுடைய வீடு, என்று சொன்னால் எப்படியிருக்கும். வாடகை வீட்டில் இருந்த போதுகூட கௌரவமாக வாழ்ந்தேன். என் மாமனார் கொடுத்த வீட்டை டெவலப்தான் செய்திருக்கிறேன்.  என்னுடைய மனைவியின் தந்தை வீடு கட்ட ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தார். அதற்கு இதுவரை வட்டி கட்டி வருகிறேன். இன்று காலையில்கூட என் வாட்ஸ் அப்பிற்கு மாத்திரைகள் படத்தை அவர் அனுப்பியிருந்தார். அதைப்பார்த்த நான் வாட்ஸ்அப்பில் 'டேக் கேர்' என்று பதில் அனுப்பினேன். அதற்கு அவர் உன்னுடன் நான் சண்டை என்று பதில் அனுப்பினார். தாங்க்ஸ் என்று சொல்லியிருந்தால் பிரச்னை முடிந்துபோயிருக்கும். அவர்களைச் சரியாக வழிகாட்ட யாருமில்லை. அவரது அப்பா, அம்மாவுக்கு ஆரம்பத்திலிருந்தே என்னைப் பிடிக்கவில்லை. என் மாமனார் அவரை ஒரு  டிரம்ப் என்றே கருதுகிறார். ஆரம்பத்திலிருந்தே என்னுடைய வேலை அவருக்குப்பிடிக்கவில்லை. என்னைப்பற்றி அவருடைய குடும்பத்தினரிடம் தேவையில்லாததை என் மனைவி சொல்லியதால் என்னை அவர்களுக்குப்பிடிக்கவில்லை. 
என் மனைவி அரைமணிநேரம் தனியாக இருந்து யோசித்தால் எல்லா பிரச்னைக்கு முடிவு கிடைத்துவிடும்.  என் மனைவியுடன் இருப்பவர்கள் பணத்துக்காக அவருடன் இருக்கிறார்கள். அவர்கள் அவருக்குத் தவறான வழியைக்காட்டுகின்றனர். என் மனைவி ஆஸ்பத்திரியில் இருந்தபோதுகூட அவருக்கே தெரியாமல் டாக்டரிடம் விசாரித்தேன். எனக்கும் என் மனைவிக்கும் சண்டை நடந்த அன்று அவர், என்னையும், குழந்தையையும் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார். அவர், வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டதால் நானும், குழந்தையும் உள்ளேதான் இருந்தோம். போலீஸாரும், வழக்கறிஞர்களும் கதவை திறந்தபிறகுதான் வெளியில்வந்தோம். அப்போது என்னை விசாரணை நடத்திய போலீஸார், குழந்தையைக் கடத்திவிட்டதாகக் கூறினர். அதற்கு நான். வீட்டில்தான் குழந்தை இருக்கிறது. அப்படியிருக்கும்போது எப்படி கடத்த முடியும் என்று கேட்டேன். உடனே போலீஸார், 'குழந்தையை உங்கள் மனைவியிடம் ஒப்படைத்துவிடுங்கள்' என்று தெரிவித்தனர். உடனே நானும் குழந்தையை ஒப்படைத்துவிட்டேன். நூறுசதவிகிதம் என் மனைவியை பார்த்துக் கொண்டதைவிட என் குழந்தையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். சூட்டிங் ஸ்பார்ட்டில் கூட குழந்தையை மடியில் வைத்து கொண்டு உணவு ஊட்டுவேன். அது எல்லோருக்கும் தெரியும். என் மனைவி பேசியதை அமைதியாக கேட்டுக் கொண்டு இருப்பதற்கு காரணம் என் குழந்தையே. என்றுமே என் மனைவியைக் குறித்து குறை சொல்லமாட்டேன். முதல் மனைவியை விவகாரத்து செய்தபிறகே நித்யாவை திருமணம் செய்தேன். எல்லாமும் அவருக்குத் தெரியும். என்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து, ஜெயிலில் அடைக்க வேண்டும் என்பதே என் மனைவி தரப்பினரின் குறிக்கோளாக உள்ளது. என் மனைவி ஆசைப்பட்டால் அவருக்காக ஜெயிலுக்கு போகவும் நான் தயார். அதற்கு முன்பு என் மனைவி கடந்த கால வாழ்க்கையை கொஞ்சம் நினைத்துப்பார்க்க வேண்டும்" என்றார் கண்ணீர் மல்க. 

’'பாலாஜிகூட வாழ்ந்தது போதும்!’’ - கலங்கும் நித்யா

நித்யாவின் பதிலைப் படிக்க   இதை க்ளிக் செய்க

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement