Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் புதிதாக 3 சட்டக்கல்லூரிகள்... முதல்வர் அறிவிப்பு!

விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக மூன்று சட்டக்கல்லூரிகள் துவங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டம்

இது குறித்து தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதன் அருகாமையில் உள்ள பிற மாவட்டங்களைச் சேர்ந்த சட்டம் பயில விரும்பும் மாணவர்களுக்கு அரசு சட்டக் கல்லூரி ஏதும் இல்லை என்பதால், இம்மாவட்டங்களைச் சேர்ந்த தகுதி வாய்ந்த மாணவர்கள் சட்டம் பயிலுவதற்கு ஏதுவாக விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக ஒரு சட்டக்கல்லூரி 2017-2018 ஆம் ஆண்டு தொடங்கப்படவுள்ளது.

விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் துவங்கப்படும் இந்த சட்டக் கல்லூரிகளில் 2017-2018 கல்வியாண்டின் முதல் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களுடனும், 5 ஆண்டு சட்டப் படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களுடனும், அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். 

மேற்குறிப்பிட்ட மூன்று அரசு சட்டக் கல்லூரிகளுக்குத் தேவையான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள், நூலக புத்தகங்கள், அறைகலன்கள் மற்றும் இதர தேவைகளுக்கு தலா ஒரு சட்டக் கல்லூரிக்கு 2 கோடியே 27 லட்சம் ரூபாய் வீதம், 3 கல்லூரிகளுக்கும் மொத்தம் 6 கோடியே 81 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement