Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடும் வெயில்... பள்ளி திறப்பு ஜூன் 7-க்கு ஒத்திவைப்பு!

கடும் வெயில் காரணமாக, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Sengottaiyan

பருவ மழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கடுமையான வெயில் கொளுத்துகிறது. குறிப்பாக, சென்னை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில், 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் வறுத்தெடுக்கிறது. இதனால், பொது மக்கள் அவதியடைந்துள்ளனர்.


மே மாதத்தின் இறுதியில் இருந்தாலும், வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கிடையே, கோடை விடுமுறையில் இருக்கும் பள்ளிகள், ஜூன் 1 ஆம் தேதி திறப்பதாக இருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறக்கும் தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.


இதையடுத்து 'கடும் வெயில் காரணமாக, தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பள்ளி திறக்கும் தேதி  தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தனியார் பள்ளிகளும் ஜூன் 5-ம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் கே.ஆர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement