Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“கொத்தடிமையா இருந்தப்பக்கூட, மூணு வேளை சாப்பிட்டேன்!” கலங்கும் பாக்கியம்

னிதத்தன்மை சிறிதும் இல்லாமல், ஆடு மாடுகளைவிடக் கடுமையாக வேலை வாங்கப்படும் கொத்தடிமை கொடுமையைப் பற்றி நாம் அறிந்திருப்போம். ஏழை மக்களின் வறுமையைப் பயன்படுத்தி முன்பணம் என்கிற பெயரில் சிறிது தொகையைக் கொடுத்துவிட்டு மொத்த குடும்பத்தையே அடிமையாக்கி வேலை வாங்குவார்கள். குறைந்த கூலியில் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்திசெய்துகொள்ள முடியாமல் தங்கள் வாழ்நாள் முழுவதும் வேலை செய்து மடிவது இந்தியா முழுவதும் நிகழ்ந்து வந்தது. தமிழகத்தில் செங்கல் சூளைகள், கல்குவாரிகள், மீன் பதப்படுத்துதல், கட்டட வேலையில் தமிழர்கள் மட்டுமின்றி, ஆந்திரா, உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பரம்பரை பரம்பரையாக கொத்தடிமைகளாகப் பணி செய்த சூழல் நிலவி வந்தது. 

1976 ஆம் ஆண்டு கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டத்தை இந்தியா இயற்றியது. ‘ஏக்தா பரிஷத்’ தலைவர் பி.வி.ராஜகோபால் கொத்தடிமை மீட்பு கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். தமிழகத்தில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். கொத்தடிமை முறையில் இருந்து மீட்கப்படுபவர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் கவுன்சிலிங் அளிக்க வேண்டும். மறுவாழ்வுக்கான மாற்றுத் தொழில், குழந்தைகளுக்கான கல்வி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது சட்டம். 

கொத்தடிமை

1884 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பெரம்பலூர், திருச்சி, சேலம், விழுப்புரம், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான கொத்தடிமைகள் மீட்கப்பட்டனர். அப்படி மீட்கப்பட்டவர்களுக்கு கல்குவாரி மற்றும் அரசின் நிலங்கள் ஒதுக்கப்பட்டன. வீடுகளும் கட்டித்தரப்பட்டன. ஆனாலும், போதுமான மறுவாழ்வுத் திட்டங்கள் வழங்கப்படவில்லை. பிறகு, மாவட்டம்தோறும் வருவாய்த் துறை அதிகாரிகளால் கொத்தடிமைகள் மீட்கப்பட்டாலும், அவர்களுக்கு முழுமையான மறுவாழ்வுத் திட்ட உதவிகள் சென்றடையவில்லை. போதுமான வேலைவாய்ப்பு இல்லாமல், பலரும் மீண்டும் செங்கல் சூளை மற்றும் கட்டட வேலைகளுக்கே சென்று கொத்தடிமைகளாகத் தொடரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அப்படியான அவல வாழ்க்கையின் ஓர் உதாரணம்தான் திருச்சி கோனாலி கிராமத்தைச் சேர்ந்த பாக்கியம். 

'‘நாங்க எல்லாம் ரொம்ப வருஷமா கல் குவாரியில் கொத்தடிமைகளாக இருந்தோம். 1988-ம் வருஷம் அரசாங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டோம். ரொம்ப நாள் குவாரியிலேயே இருந்து மீட்கப்பட்டு வெளியுலகத்துக்கு வந்து மக்களைப் பார்த்தோம். இனிமே மத்தவங்க மாதிரி மரியாதையான வேலை செஞ்சு சந்தோஷமா வாழலாம்னு நினைச்சோம். எங்களுக்குக் கல் உடைக்கிறதைத் தவிர, வேற எந்தத் தொழிலும் தெரியாது. எங்களுக்கு சின்னதா ஒரு குவாரியைத் தந்தாங்க. கொஞ்ச நாள் அந்தக் குவாரியில் கல் உடைச்சு கால் வயிறும் அரை வயிறுமா கஞ்சி குடிச்சி வாழ்ந்தோம். பெரிய பெரிய குவாரிகள் வந்து, பெரிய இயந்திரங்களை வெச்சு கல் உடைக்க ஆரம்பிச்சாங்க. எங்களுக்குப் பொழப்பு போயிருச்சு. எங்க பிள்ளைகளுக்கும் கல் உடைக்கிற வேலையைத் தவிர வேற எதுவும் தெரியாது. பிள்ளைகளைப் படிக்கவைக்கிறதுக்கும் பக்கத்துல பள்ளிக்கூடம் இல்லை. தூரமா இருக்கிறதால தொடர்ந்து படிக்கவைக்க முடியலை. சாப்பாட்டுக்கே வழி இல்லாம திண்டாடுறோம். 

'கொத்தடிமையா இருந்தப்பொவாவது மூணு வேளை சாப்பிட்டோம்'னு எங்க சனங்களில் நிறைய பேரு எங்கே இருந்து வந்தாங்களோ, அந்த முதலாளிங்ககிட்டேயே போய், அவங்க கை காலில் விழுந்து வேலைக்குச் சேர ஆரம்பிச்சுட்டாங்க. அரசாங்கம் எங்களைக் கூட்டிட்டு வந்தப்போ, கொஞ்சம் நிலம் தந்திருந்தாங்க. அந்த நிலத்தில் ஏதாச்சும் விவசாயம் செய்து பிழைக்கலாம்னு பார்த்தால், அதையும் வேற யாருக்கோ கொடுத்துட்டதா சொல்றாங்க. முதல்ல எங்களுக்குக் கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டு, இப்போ பறிச்சுக்கிட்டாங்க. பல தடவை கலெக்டரைப் பார்த்து மனு கொடுத்துட்டோம். ஒண்ணும் நடக்கலை. நடந்து நடந்து கால் தேய்ஞ்சதுதான் மிச்சம். பொம்பளைப் பிள்ளைகளை கட்டிக் கொடுக்க முடியலை. அரசாங்கம் கொடுத்த வீடும் கொஞ்ச நாளிலேயே இடிஞ்சு விழற மாதிரி ஆயிடுச்சு. ஒதுங்ககூட எங்க சனங்களுக்கு இடம் கிடையாது. தண்ணி கிடையாது. ரொம்ப கஷ்டமா இருக்கு. அரசாங்கம் எங்களை ஏறெடுத்துப் பார்க்கணும். எங்க மூணு வேளைச் சாப்பாட்டுக்கு வழி செய்யணும்'' என்கிறார் பாக்கியம் கலங்கிய விழிகளோடு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement