Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

' 'நடிக்கிறதோட நிறுத்திக்கோ... அரசியல் பேசாத'னு எனக்கு யாரும் சொல்லாதீங்க!' சின்னத்திரை நடிகை மோனிகா

நடிகை மோனிகா

“சின்ன வயசிலிருந்தே எனக்கு அரசியல் மற்றும் மக்கள் பிரச்னைகளில் குரல் கொடுக்கும் ஆர்வம் இருந்துச்சு. அப்போ, அதற்கான வாய்ப்பு கிடைக்கலை. இப்போ கேள்வி கேட்கும் மெச்சூரிட்டியும் தைரியமும் வந்திருக்குது. அதனால், சமூக வலைதளங்களில் மக்கள் பிரச்னைக்கான என் குரல் பலமா ஒலிச்சுட்டுதான் இருக்கும். இதை யாராலும் தடுக்க முடியாது'' என அழுத்தமான குரலில் பேசுகிறார் சின்னத்திரை நடிகை மோனிகா. 

"எனக்குத் தமிழ் ரொம்பவே பிடிக்கும். தமிழ் சார்ந்த துறையில் வேலை செய்ய ஆசைப்பட்டேன். காலேஜ் முடிச்சதும் சன் டி.வியில செய்தி வாசிப்பாளர் வேலை கிடைச்சுது. 2000 வருஷத்துல ஆரம்பிச்சு 2009 வரை சன் டிவி செய்திகளில் கடைசி ஐம்பது நொடிகள் வரும் வானிலை அறிக்கையை வாசிச்சுட்டு இருந்தேன். செய்திகளைப் பார்க்காதவங்ககூட வானிலை அறிக்கையைப் பார்த்ததுண்டு. இப்பவும் வெளியில போனால் பலரும் 'வானிலை அறிக்கை' மோனிகான்னுதான் கூப்பிடுறாங்க. சன் டிவியின் 'கொண்டாட்டம்' நிகழ்ச்சி தொடங்கி பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பும், பிரபலங்களைப் பேட்டி எடுக்கும் வாய்ப்பும், நடிக்கும் வாய்ப்புகளும் வந்துச்சு. பதினாறு வருஷமா சின்னத்திரையில் சாஃப்ட் கார்னர் மோனிகாவா இருந்துட்டு, இப்போ வைரல் ஸ்பீச் மோனிகாவாக மாறினது சுவாரஸ்யமானது" என்கிறார். 

நடிகை மோனிகா

"அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகள் பற்றி நண்பர்களோடு விவாதிப்பேன். இந்த உலகத்தில் எல்லோருக்கும் பேச்சுரிமை இருக்குது. தவறுகளைப் பற்றி பேசவும் உரிமை இருக்குது. ஆனால், 'நமக்கு எதுக்கு வம்பு'னு பலரும் கண்டும் காணாமல் இருக்காங்க. நானும் ஆரம்பத்தில் கட்சிக்காரர்களால் பிரச்னைகள் வருமோனு பயப்பட்டேன். 'இப்படி எல்லோரும் நினைச்சா பல பிரச்னைகளுக்கும் தீர்வே கிடைக்காது. நீ நினைக்கிறதை துணிஞ்சுப் பேசு'னு என் கணவர் உற்சாகப்படுத்தினார். 

ஜெயலலிதா இறந்த சமயத்தில் அடுக்கடுக்கான குழப்பங்கள், சந்தேகங்கள், பிரச்னைகள் இருந்துச்சு. அப்போ என் கருத்துகளை சொல்ல ஆரம்பிச்சேன். அதை சரியா மக்களிடம் கொண்டுபோக, 'எழுச்சி இயக்கம்' என்கிற ஓர் இயக்கத்தை ஆரம்பிச்சு, நான் பேசும் எல்லா வீடியோக்களையும் பதிவிட ஆரம்பிச்சேன். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சினு பார்க்காமல், மக்கள் நலனைச் சிந்திக்காத எல்லா அரசியல் கட்சிகளையும் எதிர்த்து குரல் கொடுத்தேன். 'உனக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம். நடிக்கிறதோடு நிறுத்திக்கோ. இனி நீ அரசியல் பேசக் கூடாது. மீறி பேசினா நிறைய பிரச்னைகளை சந்திக்கணும்'னு மிரட்டல்கள் வந்துச்சு. அதேசமயம், 'நீங்க தொடர்ந்து தைரியமா பேசுங்க'னு மக்கள் தரப்பில் ஆதரவும் வந்துச்சு. 

நடிகை மோனிகா

என் மேல அக்கறையோடு குடும்பம், மீடியா நபர்களும் 'அமைதியா இருந்துட வேண்டியதுதானே'னு சொல்லுவாங்க. 'யாருமே பேசாம இருக்கிறதாலதான் அரசியல் கட்சிக்காரங்க தப்புப் பண்ணிட்டே இருக்காங்க. நான் தொடந்து பேசிக்கிட்டேதான் இருப்பேன்'னு சொல்லிட்டேன். நம்மில் பலரும் நடப்பு பிரச்னைகளுக்கு ஏதாவது ஒரு வகையில் குரல் கொடுத்தாலும், அந்தப் பிரச்னையோட மூலக்காரணத்தைப் பத்தி பெருசா பேசுறதில்லை. நான் மூலகாரணங்களைப் பேசுறதோடு, பிரச்னைகள் வந்தால் அதையும் எதிர்கொள்ளத் தயாரா இருக்கேன். பேசும் பிரச்னையின் ஆழத்தையும் மக்களின் கருத்துகளையும் தெரிஞ்சுகிட்டு, அதை எப்படி மக்களுக்குக் கொண்டுபோனால் பயன் தரும்னு யோசிச்சுதான் வீடியோவா வெளியிடுறேன்" என்றார். 

'இதுவரை பல விஷயங்களைப் பேசிட்டீங்க. அதுக்கெல்லாம் தீர்வு கிடைச்சிருக்கா?' என்று கேட்டதற்கு பொறுமையாகப் பதிலளிக்கிறார்

"நான் பேசுறதைப் பார்த்து இன்னும் நாலு பேர் தைரியமா குரல் கொடுக்க வருவாங்க என்ற நம்பிக்கையிலதான் பேசறேன். விடை கிடைக்கும், தீர்வு கிடைக்கும் என்கிற எண்ணத்துலதான் ஒவ்வொரு கேள்வியையும் கேட்கிறேன். தொடர்ந்து துணிஞ்சு பலரும் சேர்ந்து கேட்க ஆரம்பிச்சா, நிச்சயம் தீர்வு கிடைக்கும்னு நம்புறேன். நான்கு பிரச்னைகள் இல்ல; நாற்பதாயிரம் பிரச்னைகள் வந்தாலும், நாம குரல் கொடுக்காத வரைக்கும் அரசியல்வாதிகள் மக்களை ஏமாத்திக் கொள்ளை அடிச்சுட்டுதான் இருப்பாங்க. 'அரசியலுக்கு வரும் எண்ணத்திலும் பப்ளிசிட்டிக்காகவும்தான் பேசுறீங்களா?'னு சிலர் கேட்கிறாங்க. அரசியலுக்கு வர நினைக்கிறவங்கதான் மக்கள் பிரச்னைகளைப் பேசணும்னு கிடையாது. அப்படி பேசித்தான் எனக்கு பப்ளிசிட்டி கிடைக்கணும்னு இல்லை. 17 வருஷமா மக்கள் மத்தியில் எனக்கான அடையாளத்தோடுதான் இருக்கேன். மக்களுக்கு நல்லது நடக்கணும் என்பது மட்டுமே என்னோட எண்ணம். இப்பவும் நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துட்டிருக்கேன்.இப்போகூட ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி பேசியிருக்கேன். தொடர்ந்து குரல் கொடுப்பேன். அதேசமயம் ' 'நடிப்போடு நிறுத்திக்கோ... அரசியல் பேசாத'னு யாரும் சொல்லாதீங்க' " என்கிறார் மோனிகா உறுதியான குரலில்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close