வெளியிடப்பட்ட நேரம்: 15:22 (26/05/2017)

கடைசி தொடர்பு:15:23 (26/05/2017)

பாதாள சாக்கடை தோண்டும்போது மண்சரிவு! இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம்

சென்னை சோழிங்கநல்லூரில் பாதாள சாக்கடைக்கு பள்ளம் தோண்டியபோது மண் சரிவில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

பலி

சென்னை சோழிங்கநல்லூரில் இன்று காலை பத்து மணியளவில் பாதாள சாக்கடை தோண்டும் பணி நடைபெற்றது. இதில் இரண்டு பக்கமும் மண் சரியாமல் இருக்க இரும்பு தடுப்பணைகள் கொண்டு பாதுகாப்புடன் பணி நடந்துள்ளது. இதையடுத்து குழாய் அமைக்கும் பணிகள் முடிந்த பின்னர் இரும்பு தடுப்பணைகளை அகற்றியுள்ளனர். அப்போது திடீரென்று மண் சரிந்துள்ளது. இதில் 2 தொழிலாளர்கள் சிக்கினர்.

இதையடுத்து மீட்பு படையினர் அங்கு விரைந்துள்ளனர். அப்போது மண் சரிவில் சிக்கிய ஒருவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், சரிவில் சிக்கிய மற்றொருவரின் உடலில் அசைவுகள் இருந்ததால் அவரை மீட்கும் பணி நடைபெற்றது. சுமார் 15 தீயணைப்பு வீரர்கள் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர். சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் பெயர் சுப்பிரமணி என தெரியவந்துள்ளது. இவர் வந்தவாசியைச் சேர்ந்தவர். தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்ட மற்றொரு தொழிலாளியும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.