கொள்ளிப்பானையில் மனு... டாஸ்மாக்கிற்கு எதிராக நூதனப் போராட்டம்!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் முக்கிய இடங்களிலுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி கொள்ளிப்பானையில் மனுவை எடுத்து வந்து ஆட்சியரிடம் அளிக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. 

டாஸ்மாக்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெரிய அளவிலான புரட்சி வெடிக்கத் தொடங்கியுள்ளது. திருப்பூர், வேலூர், புதுச்சேரி என பல்வேறு ஊர்களில் பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்குவதும், மது பாட்டில்களை அடித்து உடைப்பதும் தினமும் நடந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் இப்போராட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளால் மக்களுக்கு பெரும் தொந்தரவு ஏற்படுவதாக ஆதித்தமிழர் பேரவை குற்றம்சாட்டி உள்ளது. அதனால், நெல்லை மாநகரப் பகுதியான பாளையங்கோட்டை உழவர் சந்தை, பேட்டை எம்.ஜி.ஆர் நகர், டவுன் மாடத்தெரு ஆகிய இடங்களில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் கோஷமிட்டனர். அத்துடன், கொள்ளிப்பானையில் மனுவை ஏந்தி வந்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்து மதுக்கடைகளுக்கு எதிரான தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்த நூதனப் போராட்டத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!