Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

1,040 ஆண்டுகள் பழமையான சோழர்காலத்து சிலைகள் ஆஸ்திரேலியாவில் மீட்பு! 

15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட 1.49 கோடி ரூபாய் மதிப்புள்ள சோழர் சிலைகளை ஆஸ்திரேலியாவில்  தமிழக சிலை தடுப்பு பிரிவு போலீஸ்  மீட்டுள்ளது. 

statue recovered
 

ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் ஆஸ்திரேலியா சென்று சிலைகளை மீட்டனர். சிலைகளை மீட்டது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  ஏ.டி.ஜி.பி பிரதீப் வி.பிலிப், ’ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் 2002 ஆம் ஆண்டு திருடப்பட்டது. இந்தச் சிலைகள் 1,040 ஆண்டுகள் பழமையானது. இவை விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோயிலைச் சேர்ந்ததாகும். தமிழகத்தில் போதைப் பொருள்களுக்கு அடுத்தபடியாக கலைப்பொருள்கள் அதிகம் கடத்தப்படுகிறது.  திருடப்பட்ட சிலைகளில் மேலும் நான்கு சிலைகள் ஆஸ்திரேலியாவில்தான் உள்ளன. சோழர் காலத்து சிலைகள்தான் அதிகம் திருடப்பட்டுள்ளன' என்று கூறினார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement