Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“டாஸ்மாக் அவரைக் கொன்னுச்சு... ஆனா, விதவை சான்று கொடுக்காதாம் அரசாங்கம்!” - கதறும் பழனியம்மாள்

மதுபானக்கடை

மிழகமெங்கும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் பெண்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம் நெய்தலூரில் உள்ள டாஸ்மாக் கடையை மூடவேண்டுமெனக் கடந்த 22 ஆம் தேதி போராட்டத்தில் இறங்கினார்கள் பெண்கள். அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த 'இங்கன டாஸ்மாக் வரக்கூடாது அவ்வளதேன்'' என்று உறுதியாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார்கள் பெண்கள்.
போராட்டத்தில் பங்கு கொண்டதில் கண்ணீரும் கம்பலையுமாக நின்று கொண்டிருந்தார் பழனியம்மாள். என்னவென்று விசாரித்தோம்
''எங்க கிராமத்தைச் சுத்தி ஏழு கிலோ மீட்டர் தொலைவுக்கு எங்கனயும் டாஸ்மாக் இல்ல சார். மூணு வருசத்துக்கு முன்னாடிதான் இங்கன டாஸ்மாக்க கொண்டாந்தாங்க. அதனால வேலைக்கு போற ஆம்பள சனமெல்லாம் இங்கன வந்து குடிச்சுட்டு மல்லாந்துடுறாங்க. இந்தப் பகுதி வழியா போற வர்றவங்கள எல்லாம் கேலி கிண்டல் அடிக்கிறதுனு அவங்க பண்ற தொல்லைக்கு எல்லையே இல்லாம போயிட்டு இருக்கு. இவனுகள பாத்து பாத்து பள்ளிக்கூடம் போற ஆம்பள புள்ளைங்களும் குடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

டாஸ்மாக் பழனியம்மாள்

இங்கன டாஸ்மாக் வர்ற வரைக்கும் அப்போ, இப்போனு குடிச்சுட்டு இருந்த என் புருஷன், டாஸ்மாக் தொறந்ததுல இருந்து முழுநேர குடிகாரரா மாறிட்டார். தெனமும் சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் குடிச்சே அழிக்க ஆரம்பிச்சார். வீட்டுக்கே வராம அங்கனயே படுத்துக்க ஆரம்பிச்சார். அதனால என்னோட மூணு பொம்பளை புள்ளைங்கள காப்பாத்த நான் தெனமும் வேலைக்குப் போக வேண்டியதாச்சு.

என் புருஷனால எந்தப் பிரயோஜனமும் எனக்கில்லை. தெனமும் குடிச்சுட்டு டாஸ்மாக் பக்கத்துல கெடக்கிறவர நான் தான் போய் தூக்கிட்டு வருவேன். எனக்கு வேல அதிகமா இருந்துச்சுனா அங்கன போக முடியாது. திடீர்னு மூணு நாளா அவர வீட்டுப்பக்கமே காணோம். சரி சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிருப்பார்னு நினைச்சேன். ஆனா மனுஷன் அப்பவும் வரல. ஒருவேள டாஸ்மாக் பக்கத்துல கெடக்காரோனு போயி பார்த்தா மனுஷன் குடிச்சுட்டு தெரியாம பக்கத்துல உள்ள கெணத்துல விழுந்து செத்து கெடந்தாரு. அழுகின பொணமா அவரை என்கிட்ட கொடுத்தாங்க சார். புள்ளைங்க அவர் மொகம் பார்க்க முடியாம கதறுச்சுங்க.

 பழனியம்மாள்

அதிகாரிங்க வந்து அடக்கம் செய்ஞ்சாங்க. தாலுகா ஆபீஸ்ல எழுதி கொடுங்க... விதைவைங்கிற சான்றும் சலுகையும் கெடைக்கும்னு சொன்னாங்க. நானும் ரெண்டு வருஷமா நடையா தாலுகா ஆபீஸ்க்கு நடக்கிறேன் எந்த சலுகையும் வரல... சான்றும் கெடைக்கல.
என்கிட்ட லஞ்சத்தை அதிகாரிங்க எதிர்பார்க்குறாங்க போல.. அது இருந்தா நான் ஏன் சார் சலுகைக்கு அல்லாடப் போறேன் சொல்லுங்க. டாஸ்மாக்தான் அவர கொன்னுச்சு. ஆனா விதவைச் சான்று தர மாட்டாங்களாம்... என்ன நியாயம் சார்.." என்கிற கதறலோடு முடித்துக்கொண்டார் பழனியம்மாள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement