Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாட்டிறைச்சிக்குத் தடை... எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

இன்று நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதைத் தடை செய்து சட்டத் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு. விவசாயக் காரணங்களுக்காக மட்டுமே மாடுகளை விற்க, வாங்க சட்டத்தில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தது மத்திய அரசு. இந்தத் தடை அறிவிப்பு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறைச்சி விற்பனையாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிடும் என அச்சம் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் இந்தத் தடை அறிவிப்புக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதனிடையே மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'மத்திய அரசின் உத்தரவு, மக்களின் அடிப்படை உணவு விருப்புரிமையை தடுக்கிறது. மதச்சார்பற்ற தன்மையை அசைத்துப் பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதை மத்திய பாஜக அரசு தவிர்க்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். மேலும் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement