Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோத்தகிரியில் சாலை விபத்து - 6 பேர் பலி..!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியாயினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் சுற்றுலா முடித்து,நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தட்டப்பள்ளம் என்ற ஊர் அருகே சென்று கொண்டிருந்தபோது பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் சம்பவ இடத்திலேய 5 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த அனைவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து பலி எண்ணிக்கை ஆறாக அதிகரித்தது. காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement