பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம்..! | Former TN CM O.Panneerselvam wishes to PM Modi for three years good governance

வெளியிடப்பட்ட நேரம்: 02:11 (27/05/2017)

கடைசி தொடர்பு:02:19 (27/05/2017)

பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம்..!

இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசில் பா.ஜ.க பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் பா.ஜ.கவின் மூன்று ஆண்டு கால ஆட்சிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவருடைய வாழ்த்துச் செய்தியில், 'பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கான சாதனை திட்டங்களை நிறைவேற்றி மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் நரேந்திரமோடிக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.