Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

108 சேவைக்காக புதிய மொபைல் ஆப்...! விஜயபாஸ்கர் அறிவிப்பு..!

108 சேவையை துரிதப்படுத்துவதற்காக விரைவில் மொபைல் ஆப் உருவாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள 108 தலைமை அலுகத்தில் நடைபெற்ற 'தேசிய பைலட் நாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 'ஜெயலலிதாவின் அரசு திறமை மற்றும் ஆற்றல் வாய்ந்த அவசர மருத்துவ சேவை வழங்க 108 அவசரகால ஊர்தி சேவையை உறுதி செய்துள்ளது. ஆரம்ப காலத்தில் 15 ஊர்திகளுடன் தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்று 855 ஊர்திகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  இவ்வனைத்து ஊர்திகளிலும் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு மையக் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு,  சாலை விபத்து ஏற்படும் பொழுது 15 நிமிடம் 30 நொடிகளில் சென்றடையும் வகையில் சிறப்பாக செயல்படுகிறது.

இது தேசிய சராசரியான 18 நிமிடத்தை விட மிக  குறைவானதாகும்.  இதேபோன்று பெருநகரங்களில் விபத்து நடந்த இடத்திற்கு 11 நிமிடத்தில் சென்றடையும் வகையில் உள்ளது.  இதனை 10 நிமிடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 41 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது. மாதத்திற்கு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்பெற்று வருகின்றனர். மேலும், 108 சேவை மையத்தை தொடர்பு கொண்டு விபத்து நடைபெற்ற இடத்தை தெரிவிக்கும் போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு பிரத்தியேகமாக கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டு நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

இச்சேவையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசெல்வம் அவர்களால் விரைவில் தொடங்கிவைக்கப்படவுள்ளது. இந்தக் கைப்பேசி செயலி செயல்படுத்தப்பட்ட பின் 108 சேவையைத் தொடர்பு கொள்ளும் பொழுது தொடர்பு கொள்பவர் இருக்கும் இடத்தின் முழு முகவரியும் சேவை மையத்திற்கு தெரிய வரும்.  இதனால் சேவை மையத்தில் சரியான முகவரியை  கேட்டு கால தாமதம் ஆவது தவிர்க்கப்படும். இரவு பகல் பாராது, பேரிடர் காலங்களிலும் இந்த அருஞ்சேவை ஆற்றிவரும் பைலட்களை பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 26-ம் நாள் பைலட் தினமாக கொண்டாடப்படுகிறது' என்றார்.   இந்நிகழ்ச்சியில் சிறப்பாக சேவையாற்றிய பைலட்களுக்கு நற்சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement