'மரபணு மாற்றப்பட்ட கடுகு வேண்டாம்!' - பெசன்ட் நகரில் பேரணி

GM Mustard rally

பெசன்ட் நகரில் விவசாய ஆர்வலர்கள், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு, தமிழக விவசாயிகள் சங்கம் இணைந்து மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு எதிராக பேரணி நடத்தினர். இயற்கை ஆர்வலர் பியுஷ் மானுஷ், நடிகை ரோகினி, பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் அனந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தங்கபாலு உள்ளிட்டோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.  

'மரபணு மாற்றுப் பயிரை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது' என்பதுதான் இன்று பேரணியில் பங்கேற்ற அனைவரின் கூட்டுக் கோரிக்கையாக இருந்தது. இந்திய அளவில் பல்வேறு இடங்களில் இன்று, 'மரபணு மாற்றப்பட்ட கடுகு'க்கு எதிராகப் பேரணிகள், போராட்டங்கள் மற்றும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் பரவலாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாகத்தான் பெசன்ட் நகரில் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடி இந்தப் பேரணியை நடத்துகின்றனர்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!