வெயில் தாக்கம் குறையுமா? அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது..!

அக்னி நட்சத்திரம் எனப்படும் அதிகப்பட்ச வெப்பநிலை நிலவும் காலம் தமிழகத்தில் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து படிப்படியாக வெப்பம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வந்தது. கடந்த மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து மேலும் கடுமையாக வெயில் வாட்டியது. பருவ மழை பொய்த்திருந்த நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. மற்ற ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கடுமையான வெயில் தாக்கம் இருந்ததாகவே அறியப்பட்டது. பெரும்பாலான நகரங்களில் 110 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வந்தது. இந்த நிலையில் இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைய உள்ளது. எனவே வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!