வெளியிடப்பட்ட நேரம்: 08:21 (28/05/2017)

கடைசி தொடர்பு:08:54 (29/05/2017)

குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்.. குடிநீர் கேனுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். 

water can
 

கேன் குடிநீருக்கு 18% ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வரிவிதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இன்று மாலை முதல் போராட்டம் தொடங்குகிறது. 18% ஜி.எஸ்.டி வரியை திரும்பபெறும் வரை போராட்டம் நடத்தப்போவதாக தேசிய மற்றும் மாநில அரசுகளுக்கு குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் குடிநீர் கேனுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க