வெளியிடப்பட்ட நேரம்: 10:02 (29/05/2017)

கடைசி தொடர்பு:10:04 (29/05/2017)

பாம்பனில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு!

கொல்கத்தாவின் தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதியிலிருந்து 720 கி.மீ தொலைவிலும், சிட்டகாங்கிலிருந்து தென்மேற்குத் திசையில் 630 கி.மீ தொலைவிலும் 'மோரா' புயல், நிலைகொண்டுள்ளது. இதனால், பாம்பன் துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

pamban
 

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. 'மோரா' எனப் பெயரிடப்பட்ட இந்தப் புயல் வலுவடைந்து, 24 மணி நேரத்தில் வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.