Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நுகர்வோருக்கான புதிய செயலி: இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் அறிமுகம்!

இந்தியாவிலேயே முதன்முறையாக, நுகர்வோர் புகார் தெரிவிக்க ஏதுவாக, சென்னையில் புதிய செயலி (app) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் புகார் தெரிவிக்க


சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில், இந்தப் புதிய புகார் அளிக்கும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் செயலியின்மூலம், நுகர்வோர் அன்றாடம் சந்திக்கும் வியாபார ரீதியான புகார்களை உடனுக்குடன் பதிவுசெய்யலாம். இந்தப் புகார், உடனடியாகப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். பதிவுசெய்யப்படும் புகார்களுக்கு, உடனே  நடவடிக்கையும் எடுக்கப்படும்' என, மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.


புதிதாக அறிமுகமாகியுள்ள இந்தச் செயலியின் பெயர், டிஎன்-எல்எம்சிடிஎஸ் (TN-LMCTS). இந்தச் செயலியை தமிழகத் தொழிலாளர்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதை, கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் கூறுகையில், ’கடைகள், பெட்ரோல் நிலையங்கள், வணிகச் சந்தைகள் என அனைத்து இடங்களிலும் தாங்கள் வாங்கும் பொருள்களின் எடை குறைந்து காணப்பட்டாலோ, பொருள்களின் தரம், விலை, எடை ஆகியவற்றில் குழப்பங்கள், பிரச்னைகளைச் சந்திக்க நேர்ந்தால், உடனடியாக இந்தச் செயலியில் புகார் அளிக்கலாம். இந்தப் புகார்கள், உடனடியாகத் தொழிலாளர் துறையின் கவனத்தில் எடுத்து, தகுந்த நடவடிக்கை எடுக்கும்’ எனத் தெரிவித்தார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement