சென்னை ஐ.ஐ.டி வளாகத்தினுள் மாட்டிறைச்சி திருவிழா!

மத்திய அரசைக் கண்டித்து சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் மாட்டிறைச்சி உண்ணும் திருவிழாவை நடத்தியுள்ளனர்.

beef fest
 

கால்நடை வர்த்தகத்துக்கான விதிமுறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி இறைச்சி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக் குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு  தடை விதித்துள்ளது. மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.கேரளாவில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  மாட்டிறைச்சி திருவிழா நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் கேரளாவில் நடைபெற்ற Beef Festival போன்று பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் திருவிழாவை நடத்தியுள்ளனர்.

நேற்று மாலை சுமார் 80 மாணவர்கள் இணைந்து மாட்டிறைச்சி திருவிழா நடத்தியுள்ளனர். மாட்டிறைச்சி உணவு வகைகளை ஹோட்டலில் வாங்கிவந்து வளாகத்தின் உள்ளேயே இணைந்து சாப்பிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் ஐ.ஐ.டி.யில் மத்திய அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு இணையத்தில் ஆதரவு பெருகிவருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!