Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுச்சேரியில் மருந்துக் கடைகள் பந்த்துக்கு சிக்கல்... ஆட்சியர் முக்கிய உத்தரவு!

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை புதுச்சேரியில் மருந்துக் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, மருந்துக் கடைகளை நாளை மூட 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் புதுச்சேரி ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'எனக்கு வந்திருக்கும் தகவல்படி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை புதுச்சேரியில் இருக்கும் அனைத்து மருந்துக் கடைகளையும் மூட புதுச்சேரி மருந்து வியாபாரிகள் சங்கம் முடிவு செய்திருப்பதாக அறிகிறேன். மருந்துக் கடைகளைப் பொறுத்தவரை, அது அத்தியாவசிய தேவைச் சட்டத்தின் கீழ் வருகிறது. அதன்படி பார்த்தால், நாளை கடைகள் மூடப்படுவது அடிப்படையாகத் தேவைப்படும் மருந்துகளைக் கிடைக்கச் செய்யாத நிலையை உருவாக்கும். இதனால், மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே 144 தடை சட்டத்தின் கீழ், நாளை யாரும் மருந்துக் கடைகளை மூடக் கூடாது என்று உத்தரவிடுகிறேன். உத்தரவை மீறுபவர்கள் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.' என்று தெரிவித்துள்ளார். 

இதனால், நாளை புதுச்சேரியில் மருந்துக் கடைகளின் பந்த் திட்டமிட்டபடி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement